Don ஒலிப்பேழை - சில கோவையற்ற எண்ணங்கள்
அந்நியனில் கண்ணும் கண்ணும் நோக்கியாவைக் கேட்டதும், வசுந்தரா தாஸின் மேலிருந்த ஈர்ப்பால் பாடலை வேறுவிதமாகக் கற்பனை செய்திருந்தேன். திரையில் பார்த்தபோது என்னைப் பொருத்தவரையில் கொஞ்சம் ஏமாற்றம். புதுப்பேட்டையின் எங்க ஏரியா உள்ள வராதே, வேட்டையாடு விளையாடுவின் கற்கக் கற்க இவை பாடலைக் காண்பதற்கு முன்பே எனது கற்பனையில் வேறு காட்சிகளாக ஒடியிருக்கின்றன. திரையில் பாடலைப் பார்ப்பதற்கு முன் ஒலிப்பேழைகளைக் கேட்கையில் எனது பயிற்சிக்கேற்ப ஏதாவதொரு கற்பனை வடிவம் மனதிற்குக் கிடைக்கின்றது.
இப்பொழுது மீண்டும் அப்படி ஒரு பாடல்.
இது ஏற்கெனவே திரையில் பார்த்ததுதான் என்றபோதும், பாடியவர் மேலிருக்கும் ஈர்ப்பு பாடல் காட்சி குறித்த கற்பனைகளை வளர்த்துவிட்டது.
பழைய பாடல்தான், ஆஷா போஸ்லே + ஹெலன் + கல்யாண்ஜி ஆனந்த்ஜி கூட்டணியில் எழுபதுகளின் இறுதியிலிருந்து இன்று வரையில் இந்தித் திரைப்பாடல் ரசிகர்களைத் தலையாட்டவைக்கும் பாடல்தான், அந்தக்கால ஐட்டம் நம்பர்தான். ஆனாலும், சுனிதி சௌஹானின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது பழைய பாடலை எப்படி இன்றைய திரைக்கு மாற்றியிருப்பார்கள் என்பதைப் பார்க்கும் ஆவலும், இப்படியெல்லாம் படமாக்கியிருப்பார்களோ என்னும் கற்பனையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.
பழைய டான் திரைப்படத்தின் 'யே மேரா தில் ப்யார்கா தீவானா' பாடலைத்தான் குறிப்பிடுகிறேன். திரையில் அமிதாப், ஹெலன்.
அதே பழைய டான், ஷாருக் நாயகனாக நடிக்க மீண்டும் திரைக்கு வருகின்றது. தமிழில் பில்லாவாக இது வெளிவந்தது. அதில் நான் குறிப்பிடும் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். திரையில் ரஜினி, ஹெலன். 'நினைத்தாலே இனிக்கும் சுகமே நெருங்கி நெருங்கி பழகிய விதமே' இப்படி வரிகள் செல்லும்.
பழைய டானிலும் தமிழிலும் ஹெலன் அம்மையார் ஆடிய நடனக் காட்சிகளுக்காக புதிய டானில் கரீனா ஆடியிருக்கிறார். பிரபலங்கள் ஐட்டம் நம்பர்களுக்கு வருவது புதிதல்ல. ஹெலன் ஆடிய பழைய ஐட்டம் நம்பருக்காக முன்னணிக் கதாநாயகி வந்திருப்பது முதன்முறை, இந்தித் திரையின் இன்றைய போக்கு...சல்தா ஹை.
ஆஷாவின் குரலில் யே மேரா தில் கேட்க இங்கே
சுனிதியின் குரலில் யே மேரா தில் கேட்க இங்கே
*****
ஷோலே திரைப்படத்தை அரங்கிற்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அரங்கில் ஒரு நிகழ்வை நீங்கள் காணக்கூடும். பலர் இடைவேளை முடிந்து படத்தின் இரண்டாம் பகுதி துவங்குவதற்கு முன் அடித்துப்பிடித்து அரங்கத்திற்குள் வந்து அமர்ந்துவிடுவார்கள். மாணவப் பருவத்தில் ஷோலேயைப் பார்க்கும்போது அரங்கத்தில் இது நடந்தது, இளைஞனாக இருந்து அரங்கில் இதைப் பார்க்கும்போதும் இதுதான் நடந்தது. நாற்பதைக் கடந்த பிறகு ஷோலேயை அரங்கில் பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.
அப்படி என்ன அவசரஅவசரமாக வந்து இருக்கையில் அமரவேண்டும்?
காரணம் இருக்கிறது. இடைவேளை முடிந்து படம் துவங்கியதும் ஜலால் ஆகா + ஹெலன் + ஆர்.டி.பர்மன் கூட்டணியின் பிரபலமான மெஹ்பூபா மெஹ்பூபா பாடல் துவங்கிவிடும். ஐந்தாறு நிமிடங்களுக்கு பேஞ்சோ இசையும், ஹெலனும், பஞ்சிம்தாவும் (ஆர்.டி.பர்மன்) சேர்ந்து ரசிகர்களைக் கிறங்கடித்துவிடுவார்கள்.
ஷோலேயைப் பார்க்காததாலும், ரஜினியின் பில்லாவைப் பார்க்காததாலும் ஹெலன் அம்மையாரைத் தெரியாதென்று தமிழ் ரசிகர்கள் சொன்னால், சிவாஜியின் உத்தமபுத்திரன் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்கலாம். 'யாரடி நீ மோகினி' பாடலில் நடனக் குழுவின் தலைவியாக வந்து சிவாஜியுடன் ஆடியிருப்பார். அந்த நடனத்தின் அமைப்பாளரும் அவர்தான் என்பது வாய்வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டது. நடனக்காரராக இருந்த போதும் இந்தித் திரை இவருக்குத் தந்த அங்கீகாரம் உயர்வானது. இந்தித் திரையில் இவரது பங்களிப்பிற்காக ஃபிலிம் ஃபேர், விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. காபரே நடனக்காரர் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் அவார்ட் வாங்கியது இன்று வரையில் இந்தியத் திரையுலகில் ஹெலன் ஒருவர்தான்.
இவரது நடனத்திற்கு ஆஷா போஸ்லே பாடிய பாடல்கள் நிலைத்தவை. பியா தூஊஊ அப்தோ ஆஜா ஹஹஹ்ஹா பழைய பாடலில் ஆஷா போஸ்லே அம்மையாரின் குரல் இன்னமும் பலரை கட்டிப்போட்டுதான் வைத்திருக்கிறது, மேலே குறிப்பிட்டிருக்கும் 'யே மேரா தில் ப்யார்கா தீவானா'வும்தான்.
*****
பழைய டான் திரைப்படத்தை மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஷாருக், அர்ஜுன் ராம்பால், கரீனா, பிரியங்கா, ஈஷா கோபிகர் என நட்சத்திரக் கூட்டம் இருக்கிறது.
பில்லாவுடன் இந்தப் பாத்திரங்களைப் பொருத்திப் பார்த்தால்,
ரஜினி - ஷாருக் கான்
ஸ்ரீபிரியா - பிரியங்கா
ஹெலன் - கரீனா
தேங்காய் சீனிவாசன் - அர்ஜுன் ராம்பால்
மை நேம் ஈஸ் பில்லா பாடலின் முக்கியமான நடனப் பெண் - ஈஷா கோபிகர்
புதிய டானின் புகைப்படங்களைக் கதையுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் இப்படித்தான் பாத்திரங்கள் இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. கரீனாவின் பாத்திரத்தையும் அர்ஜுன் ராம்பாலின் பாத்திரத்தையும் சில தளங்கள் உறுதி செய்கின்றன. பிரியங்கா, ஈஷா இருவரின் பாத்திரமும் எனது அனுமானங்கள்.
புதிய டான் ஒலிப்பேழையின் அட்டையில் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். பழைய டானிலிருந்து இரண்டு பாடல்களின் மூலமெட்டையும், பாடல் வரிகளையும் எடுத்து மறுகலவை செய்திருப்பதைக் குறிப்பிட்டு, பழைய பாடல்களின் பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இளையவர்களுக்கு பழைய திரைக் கவிஞர்கள் இந்தீவரையும் அன்ஜானையும் இப்படி அறிமுகம் செய்திருப்பது பாராட்டுக்குறியது. இந்த இரண்டு பாடல்கள் நீங்கலாக மற்றவை புதிய பாடல்கள்.
புதிய டானின் இசையைப்பாளர்கள்,
ஆப்பிரிக்கக் காட்டுப் புலி ஆள்தேடும் வேட்டைப் புலி
முன் ஜென்ம மோப்பம் தேடி அலையுதே! - ஆளவந்தான். அவர்களே, ஷங்கர் - எஹ்ஸான் - லாய்.
புதிய டான் வெளியாகும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
******
தமிழில் இப்படி மீண்டும் எடுக்கவேண்டுமென்றால் எனது தேர்வு புதிய பறவை. சிவாஜியின் பாத்திரத்தில் கமலஹாசன். மூலமெட்டின் மறுகலவையாக நான் கேட்க, பார்க்க நினைக்கும் பாடல்கள் எங்கே நிம்மதி, பார்த்த ஞாபகம் இல்லையோ.
*****
அன்புடன்
ஆசாத்

Comments
நாம அதுக்குப் பத்து வருசம் முந்தி :)
இந்தி தோடா தோடாலதான் தொடங்கும், அப்புறம் படா படா ஆகலாம்.
பக்கத்துல பாக்கிஸ்தானி, ஐதராபாதி யாராச்சும் இருந்தா தைரியமா தெரிஞ்சத அடிச்சு வுடுங்க, பாஷ தானா வரும்.
அன்புடன்
ஆசாத்
இங்கே செட் மேக்ஸ்,செட்,எம் டீவி வகையாறாக்களில் இந்தப் பாடலுடன் டான் பட ட்ரெய்லரும் காண்பிக்கப்படுகிறது.
அத்தப் பார்க்கலீங்களா அண்ணாத்தே?
---- தமிழில் இப்படி மீண்டும் எடுக்கவேண்டுமென்றால் எனது தேர்வு புதிய பறவை.சிவாஜியின் பாத்திரத்தில் கமலஹாசன்.---
எனக்கு மிஸ்ஸியம்மாவைப் பார்க்கணும் போலிருக்கு. ஜெமினி -> சூர்யா,சாவித்ரி -> ஜோ
இஷா கோபிகர்தான் டான் ஷாருக்கிற்கு ஜோடி ;)
மத்தபடி நீங்கள் சொல்லிய பாத்திரங்கள் சரியே :-)
ஷாருக் டான் பார்த்த பிறகு பழைய படப்பாடல்களை பார்த்தேன். பழசைவிட புதுப்படப் பாடல்களே எனக்கு பிடித்திருந்தது :-)