அன்புடையீர்,
வணக்கங்கள்.
இண்டர்டிப்பண்டண்ட் என்னும் வார்த்தையை நான் அதிகமாக உபயோகித்தது ஸ்டீஃபன் கவியின் புத்தகத்தைப் படித்த பின்னர்தான். தர்க்கரீதியாக நாம் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டுதான் வாழ்கிறோமென்றாலும், நம் மனதில் எவருக்கும் கட்டுப்படாமல் வாழும் விருப்பம் இருப்பதாகவே உணர்கிறேன்.
அது ஒரு விளம்பரப் படம். பணியாளர் ஒருவர் தனது மேலாளரை அலட்சியமாகப் பார்க்கிறார், மேலாளரின் மிரட்டலுக்கு முகத்திலடித்தாற்போல் எதிர்வினை செய்துவிட்டு வெளியே நடக்கிறார். 'இவர் எங்கள் மூலமாக புதிய வேலை வாய்ப்பைப் பெற்றவர்' என்னும் வாசக்ம் பின்னணியில் ஒலிக்கிறது. இங்கே பிரதானமாகக் காட்டப்படுவது தற்போதைய வேலையிலிருந்து விடுதலை.
'முதல் மரியாதை' திரைப்படத்தில் ஒரு காட்சி. சிவாஜி இறுகிய முகத்துடன் வீட்டைவிட்டு வெளியே வருகின்றார். வானத்தைப் பார்க்கிறார், சுற்றுப்புறத்தைக் கொஞ்சம் பார்க்கிறார். அவரிடமிருந்து லேசான பெருமூச்சு வருகின்றது, முகம் மலர்கின்றது, புன்னகைத்தபடியே நடக்கத் துவங்குகின்றார். அங்கே அவருக்குத் தேவைப்பட்டது விருப்பமில்லாத உறவிலிருந்து தற்காலிகமான விடுதலை.
இன்றைக்கு கோலாலம்பூரில் நான் தங்கியிருக்கும் விடுதியின் கீழே இரண்டு இளைஞர்கள் பேராவூரணியைச் சேர்ந்தவர்களாம், செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும் நடைபாதையில் கடைபரப்பிவைத்து விற்கிறார்கள். சொந்தபந்தங்களைப் பிரிந்துவந்து மலேயாவில் பிழைப்பு நடத்துவது பொருளாதாரப் பிடியிலிருந்து கொஞ்சமேனும் விடுதலை பெறுவதற்காக. அந்த இரண்டு இளைஞர்களைப் போலவே வளைகுடா நாடுகளில் பணியிலிருக்கும் பலர், ஓரளவிற்குப் பணம் சேர்த்தால் போதும் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ வீடு திரும்பலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை வளைகுடா வாழ்வின் தனிமையிலிருந்து விடுதலை.
எல்லாரும் எதிலிருந்தாவது விடுதலை பெறவேண்டும் என்னும் நினைப்பில் கொஞ்சமாவது ஆழ்ந்துதான்போகிறோம் என்பது எனது கருத்து. சில தத்துவார்த்தமான பொழுதுகளில் துறவறச் சிந்தனை மேலோங்கி குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வோமா என்னும் நினைப்பு தோன்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்படியாக நமது மனதில் மூலையில் எங்கோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் விடுதலை உணர்வோ, அல்லது, மனதிற்குள் தினசரி ஆட்டம் போட்டு 'போராடு போராடு' என நம்மை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் விடுதலை உணர்வோ, சில இடங்களில் வாழும் அனைவருக்கும் பொதுவாகத் தோன்றும் நாடு, மொழி, இனம் தொடர்பான விடுதலை உணர்வோ, இவை எதுவுமே இல்லை அய்யா - 'காதலித்துத் தொலைத்துவிட்டேன், கனவுகள் அலைக்கழிக்கின்றன, இதிலிருந்து விடுதலை கிடைக்குமா' என வேறு கண்ணோட்டத்தில் விடுதலையை அணுகும் மனப் பக்குவமோ, இந்தப் பட்டியலில் தந்திருப்பவையல்லாமல் உங்கள் சிந்தனை ஓட்டத்தில் தோன்றும் வேறு ஏதோ விடுதலை உணர்வோ, அது குறித்து எழுதுங்கள்.
அக்டோபர் மாதத்தின் போட்டிக்கான தலைப்பு 'விடுதலை'.
சுதந்திரமாக அனைவரும் தங்கள் கற்பனையை விரிக்கவேண்டுகிறேன். வழக்கம் போல வாக்களிப்பவர்களும் நடுவர்களும் பரிசுக்குரிய படைப்பைத் தேர்ந்தெடுக்கத் தூண்டவேண்டும் :) நமது ஆர்வம், செய்கை இவற்றால் போட்டி அமைப்பாளர்களுக்கு இன்னொரு வெற்றியை நாம் தரவேண்டும் என்னும் வேண்டுகோளுடன் இதனை முடிக்கின்றேன்.
கூடுதல் தகவல்களுக்கு -
போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php
படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php
படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - அக்டோபர் 18, 2006
அக்டோபர் 19 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.
நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்

Comments
முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் !
அடுத்த போட்டி தலைப்பும் நன்றாக உள்ளது !
விடுதலையா! ம்ம்ம்ம்.... யோசிக்கிறேன்...இப்பொழுதே...
MurattukkaLai,
Ko.vi.kaNNan,
Prasanna,
G.Ragavan,
Thanks.
anbudan
Azad
பல நேரடியான அர்த்தங்களையும் எத்தனையோ விதமான தொடர்புப் பொருள்களையும் கொடுக்கக் கூடிய சொல்லைக் கொடுத்திருகிறீர்கள். படைப்புகள் குவியப் போகின்றன.
அருமை.
நல்ல தலைப்பு ஆசாத்.
வெற்றி பெற்றவர் 'விடுதலை' க்கு வழிகாட்டிவிட்டார்.
வாழ்த்துக்கள்.
Thanks.
*
Natarajan ayya,
mikka nanRikaL.
*
Simulation ayya,
Thanks.
Just coming to blog during my vacation. After returning to Chennai, I will put the badge.
anbudan
Azad
டைமிங்கான போட்டித் தலைப்பு
யாழ்வார்க்கும்இன்னிசையோஎம்இறைவா! =வாழ்ந்தேகும்
வெங்கலமென வெண்பா படைத்துவென்ற
எங்கள் சகோதரனின் தமிழ்!
வாழ்த்துகள் ஆசாத்ஜீ..!வலைப்பக்கம் அண்மைகாலமாகத்தான் வருகிறேன்...முதலில் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகூறி நுழைகிறேன்.
அன்புடன்
ஷைலஜா(மரத்தடி ஷைலஜாதான்!!)
விடுதலை வன்பற்றும் வீண்பேச்சும் அன்பு
விடுதலை மற்றோரை வஞ்சிக்கும் எண்ணம்
விடுதலை சற்றே விரும்பு.
எழுதிய என்றனக் கேற்ற பரிசில்
அழுகிய தக்காளி அத்தோடு முட்டை
பழுதின்றி ஈராய்ப் பிரித்து - வழுவாத
வெண்பாவில் வேங்கைக்கும் வாத்திக்கும் சீராய்
எண்ணிக் கொடுத்திடு இங்கு.