Skip to main content

சில சொந்த சமாசாரங்கள் - சிங்கை (1)

சில சொந்த சமாசாரங்கள் - சிங்கப்பூர் (1)

22ம் தேதி இரவு பதினொன்றரை மணியளவில் கடவுச் சீட்டையும், பயணச் சீட்டையும் முகவரிடமிருந்து வாங்கும் வரையில் சிங்கப்பூர் பயணம் உறுதியாகவில்லை. அதன் பிறகே மறுநாள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினேன். மறக்காமல் சிங்கை நண்பர்களின் தொலைபேசி எண்களைக் குறித்து வந்து, சிங்கை சேர்ந்ததும் அவர்களுடன் ஒரு ஹலோ சொல்லியபின் திருப்தியாக இருந்தது.

ரா.கா.கி. நண்பர் சலாஹுத்தீன் அவர்கள் 'பாய் ஏர்போர்ட்டிற்கு வரவா' என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரிடம் அன்பாக 'வேண்டாம்' சொல்லிவிட்டு 23ம் தேதி மாலை சிங்கையை அடைந்து, அந்த பளப்பளா சாலைகள், அடுக்குமாடிகள், நியான் விளக்குகள், எம்.ஆர்.டி., எல்லாவற்றிலும் மீண்டும் ஒருமுறை மனதை இழந்தாகிவிட்டது.

பயணக் குறிப்புகள் எழுதினால், பயணத்தில் சந்தித்த / தொலைபேசிய நண்பர்களின் பட்டியலை வலைப்பதிவில் இடுவது எழுதாத சட்டமாக விரிந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் இந்த வழக்கத்துடன் எனக்கு உடன்பாடு இல்லையென்றபோதும், மரபாக அது வளர்ந்திருப்பதால் கடைப்பிடித்தல் அவசியமாகிறது.

ஆகிர் ஃபார்மாலிட்டீஸ்தோ பூரி கர்னா ஹைனா :) [கடைசில வழக்கமானத செய்யணுமில்ல]

அத்தனை பரபரப்பான சாலையிலிருந்து உள்ளே சென்றதும், கனவுலகில் நுழைந்தாற்போல் வானளவு நின்ற மலையும், நீர்த்தேக்கமும், அதன் நடுவில் ஒற்றையாக ஒரு மரம் நின்று 'அமைதியான நதியினிலே ஓடத்தை' நினைவுபடுத்தியதும், மாலையில் சென்றமர்ந்து நேரம் செல்லச் செல்ல இருள் கவிந்ததும், உடனிருந்த நண்பர் அங்கேயே நோன்பு திறந்ததும், அரட்டைகளும், கருத்துப் பரிமாற்றங்களும், நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றதும், மரத்தடி தம்பி எம்.கே.குமாரின் முதலடியாலும், மற்ற நண்பர்கள், சகோதரியின் ஒத்துழைப்பாலும் இது சாத்தியமானதும், மொத்த விவரங்களையும் அடுத்த ஓய்வுவேளையில் எழுதுகிறேன்.

இப்போதைக்கு நான் எடுத்த இரண்டு படங்கள் மட்டும்.
























அன்புடன்
ஆசாத்

Comments

//பயணக் குறிப்புகள் எழுதினால், பயணத்தில் சந்தித்த / தொலைபேசிய நண்பர்களின் பட்டியலை
வலைப்பதிவில் இடுவது எழுதாத சட்டமாக விரிந்திருக்கிறது//

ஊர் எப்பவும் அப்படியேதான் இருக்கும். கட்டிடங்களா நமக்கு முக்கியம். மனிதர்கள்தானே?
அதனால்தான் பயணக்குறிப்பில் இவுங்களை முதல்லே கொண்டுவந்துடறது.:-))))

சரி. அங்கெ எல்லாரையும் கேட்டதாகச் சொல்லுங்கள். உங்களுக்கும் இப்ப நோம்பு காலம்தானே?
நேற்று தொலைபேசியில் கூப்பிட்டபோது தாங்கள் செந்தோசா போயிருப்பதாக சொன்னார்கள்.
மறுபடியும் தொடர்புகொள்கிறேன்.
ஆமாம் ஞாயிறு மீட்டிங் நடந்ததா?
gulf-tamilan said…
singapore இல் என்ன புதிது?? happy journey!!!
ஆஹா, எழுத ஆரம்பிச்சாச்சா?

சிங்கைமுரசுல இப்பொழுதுதான் இதுகுறித்து எழுதினேன்.

நன்றி.

எம்.கே.

http://singaimurasu.blogspot.com/
கசி said…
நீங்க பாயா?

என் புருஷனுக்கு பாய்னாலே புடிக்காது. பாயைப்போட்டு பிராண்டும்.
துளசியக்கா,

நம்ம மக்கள் சிலரச் சந்திச்சேன். நல்ல மக்கள். நோன்புக்காலம்தான், ஆனாலும் பயணத்துல இருக்றதால கொஞ்சம் விதிவிலக்கு எடுத்துக்கலாம்.

*

குமார் அய்யா,

சந்திச்சாச்சு இல்லீங்களா! நல்ல உரையாடல் அய்யா.

*

கல்ஃப் தமிழன்,

ரமதான் எப்படிப் போவுது சவூதில? சிங்கை செய்திகள் ரெண்டு நாள் கழிச்சு எழுதுவேன்.

*

எம்.கே. நன்றிகள் ஜீ. அப்புறமா கே.எல். போய்ட்டு மட்தத எழுதுறேன்.

*

மேடம் ராதா ராகவன்,

வருகைக்கு நன்றிகள்.

இப்படிச் சிரிப்'பாய்'
குறும்'பாய்'
நட்'பாய்'
கலகலப்'பாய்' பின்னூட்டமிட்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள்.

*

அன்புடன்
ஆசாத்
ஆசாத்,

........ம். சாதிச்சிட்டிங்க. வாழ்த்துக்கள்.
குமாரின் சிங்கைமுரசு பதிவில் புகைப்படங்கள் பார்த்தென்.

புக்கிட் கொம்பாக் மலைக்குப் எதிரில்தான் எனது சிங்கப்பூர் வீடு உள்ளது. அந்த அமைதியான மலைப்பகுதி, பக்கத்தில் உள்ள MRT station என்ற இரண்டு காரணங்களுக்காகத்தான் வீட்டை தேர்வு செய்தேன்.

எட்டு வருட Boston வாழ்க்கையை முடித்துக்கொண்டு வரும் டிசம்பரில் சிங்கை வந்து செட்டிலாகப் போகிறேன்.

அடுத்த முறை தாங்கள் சிங்கை வரும்போது சந்திக்கலாம்.

-ரவிச்சந்திரன்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...