ஜின்ஜின்னாக்கடி
முத்துக்குளிக்க வாரீயளா!
மூச்சையடக்க வாரீயளா!
மனோரமாவும் நாகேஷ¤ம் கடற்கரையோரமாக ஆடிய இந்த நகைச்சுவைப் பாடலில் வருகின்ற 'ஜின்ஜின்னாக்கடி' குமரிப்பெண்ணிலும்,
வருஷத்தப் பாரு அறுபத்தியாறு
உருவத்தப் பாரு இருவத்தியாறு பாடலில் வந்திருக்கின்றது. இப்படி வினோதமாக சில ஜுஜுபிக்கள் அங்கங்கே திரையில் ஒலிப்பதுண்டு.
ஜின்ஜின்னாக்கடியைப் போலவே, ஜிம்பக ஜிம்பா ஜிம்பக ஜிம்பாவையும் பலர் நினைவில் வைத்திருக்கக்கூடும்.
ஜிம்பக ஜிம்பா ஜிம்பக ஜிம்பா ஜிம்பாரே
ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பாரே
மானைத் தேடி மச்சான் வரப் போறான் - ஹோய்
வரப் போறான் (நாடோடி மன்னன்)
ஜாவீத் அக்தரின் பேட்டி ஒன்றில் அவர் திரைக்காகத் தனது புலமையைக் குறைத்து எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு அவர்,
'திரைப் பாடல்களில் கதாநாயகன், இயக்குனர், அன்றைய மொழிவழக்கு எனப் பல காரணிகள் இருப்பதால் அங்கே நீங்கள் ஜாவீதைப் பார்க்காதீர்கள்' என்றார். ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துதான்.
ஆடைகட்டி வந்த நிலவோ - நெஞ்சில்
மேடைகட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ! (அமுதவல்லி)
என வார்த்தைகளில் சிலம்பம் ஆடிய பட்டுக்கோட்டையார்தான்,
கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு - மெய்க்
காதலுக்கு நீயும் நானும் சரி வெயிட்டு
ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்·பு - இனி
பல்பு அண்டு சுச்சு நம்ம லை·பு (நான் வளர்த்த தங்கை) என்றும்
எழுதியிருக்கிறார்.
பொதுவுடைமைக் கருத்துகளைத் தனது கவிதைகளில் இழையவிட்ட பட்டுக்கோட்டையாரின் புலமையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும், திரை என்ற ஊடகம் அவரையும் விநோதமான இயைபுகளை எழுதும்படி வைத்திருக்கிறது.
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
உன்மேல் ஆசை உண்டு
மூணும் ரெண்டும் அஞ்சு
என்னை நீயும் கொஞ்சு (உத்தமபுத்திரன்). இதனை எழுதியவர் கு.ம.பாலசுப்பிரமணியனார் என ஒலிநாடாவில் படித்தேன்.
ஆசையுள்ள ராணி / அஞ்சிடாமலே நீ / ஆட ஓடிவா காமினி எனப் பாடும் களியாட்டப் பாடலின் வரிகளை வேறு எப்படி எழுதியிருக்க முடியும். அதே திரைப்படத்தில் ராகினி அவர்களின் நடனத்தில்,
கண்ணுக்கு மேல் இருக்குது பார் ரப்பை - மச்சான்
கழனிப்பானை போலிருக்கு தொப்பை
முதன் முதலில் இதனைக் கேட்டபோது இடிஇடியென சிரிப்பு வந்தது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது,
'காசு பணம் தீந்துதுன்னா சப்பை -மச்சான்
.கொரங்காட்டம் புடி புளியங் கொப்பை' என இரண்டு வரிகளைக் கூடுதலாகச் சேர்த்து இன்னமும் அதிகமாக சிரிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய
முடியவில்லை.
இப்படிச் சிரிக்க வைத்த இன்னொரு பாடல்,
சொக்கா போட்ட நவாபு
செல்லாது உங்க ஜவாபு (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்).
'மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே' ஒலித்த திரைப் படத்தில்தான் இதுவும் ஒலித்திருக்கிறதென்றால், பாடல் வரிகளை நிர்ணயிப்பது திரைக்கதைச் சூழலே என்பது தெளிவு. திடீர் பணக்காரர், நவாபைப் போலக் களியாட்டம் போடுகிறார், நாட்டிய நங்கை எதனைப் பாடுவது? இருக்கவே இருக்கிறது இயைபு, நவாபு - ஜவாபு. கவிஞருக்கு கபாபு (சுட்ட இறைச்சி), ஷபாபு (இளைஞன்) மட்டும் தெரிந்திருந்தால் (தெரிந்திருக்கலாம்),
'சிலுக்குச் சொக்கா ஷபாபு
.சுட்டுத் தின்னு கபாபு' என இன்னும் இரண்டு வரிகள் கிடைத்திருக்கும்.
இவை இப்படியென்றால், குல்லாவையும் விட்டுவைக்கவில்லை. குல்லாவைப் போல ஒலிக்கும் இன்னொரு வார்த்தை தில்லா. அப்படியே 'தில்லா' சொல்ல முடியுமா? தில்லாவைப் போல, 'ஏ ஜில்லா ஜில்லா'என ஜில்லா ஜில்லாவாக இப்போதுதானே சாயா சிங். அப்போது அது 'தில்லா-னா'. பொருத்தமான அடுத்த வார்த்தை 'குல்லா-நீ'.
தில்லானா பாட்டுப்பாடி குள்ளத் தாரா! - எனக்கு
குல்லா நீ போடாதே குள்ளத் தாரா!
திரையில் மற்ற மொழிகளை இப்படித் தாராளமாகக் கலப்பதைத் தவறென்று நினைக்காமல் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.
'ஓசி' எப்போது நம்மிடையே கலந்திருக்கும். சரித்திரப் படங்களிலேயே இதனைப் பாடல்களில் உபயோகித்துவிட்டோமே.
ஓசி சோத்துல ஒடம்ப வளத்துட்டேன்
வேசம் கலச்சிட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
மீச இருப்பத மறந்து இருந்துட்டேன்
வீரதீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
தடுக்காத என்னத் தடுக்காத..
ஈ.வி.சரோஜா, சந்திரபாபு, தங்கவேலு இவர்கள் காலத்தில் இப்படி நகைச்சுவையாக வந்த வார்த்தைகள் அவர்களுடன் நிற்காமல் தொடர்ந்ததாகவே தெரிகிறது.
தோதா, தாஜா எல்லாம் சென்னை வழக்கில் கலந்துவிட்ட வார்த்தைகள். 'தாஜா பண்ணாத மாமே' என்றால் 'ஐஸ் வைக்காதே' எனப் பொருள். ஒத்து ஊதுவதும், பக்குவமாகப் பேசுவதும் 'தோதா பேசுறான்யா' எனப்படும். தோதா, பாடலிலே வேண்டும். கூடவே ராதா, சீதா, கீதாவும் வேண்டும்.
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா! (அன்னை இல்லம்)
அதற்குப் பிறகு, சில வருடங்கள் கழித்து டாக்டர் சிவாவிலும் இந்த 'தோதா' சமாச்சாரத்தை கண்ணதாசன் அவர்கள் மீண்டும் தந்திருக்கிறார்.
தாஜா பண்ணினாக்கா இந்த
ரோஜா சிரிக்கும் நான்
தாஜா பண்ணுவேன் - இந்த
ராதாவுக்கு
தோதா இப்ப
ஏதாவது சொல்லணும் நான்
என்ன பண்ணுவேன்
எழுபதுகளின் கடைசிகளில், எண்பதுகளின் துவக்கத்தில் ஜக்கு என்னும் ஒரு சண்டைக்கலை நடிகர் அடிக்கடி ரஜினி கமல் படங்களில் தலையைக் காட்டினார். அவர் நமக்கு அறிமுகமாவதற்கு முன்பே மனோரமா ஜக்குவை நமக்கு அறிமுகப்படுத்திவிட்டார்.
ஜாம்பஜார் ஜக்கு - நான்
சைதாப்பேட்ட சொக்கு
வாராவதிக்கும் அமராவதிக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது. அமராவதி, வாராவதியின் மேல் நின்றிருக்கும்போது தொடர்பு உண்டாகிறது.
வாராவதிலே நிண்ணுக்கிட்டிருந்தேன்
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே
அம்பிகாபதியாட்டம்
இவற்றிற்கெல்லாம் சிரிக்காமல் போனாலும், ஆயாவையும் பாயாவையும் இணைத்ததற்காகக் கொஞ்சம் சிரித்தே தீரவேண்டும்.
ஆயாக் கடை இடியாப்பன்னா
பாயாக் கறி நீயாச்சு
இந்தப் பாடலின் தத்தகாரத்தால் ஈர்க்கப்பட்டு,
சர்தான் வாம்மா கண்ணு - படா
பேஜாராச்சு நிண்ணு என்னும் வரிகளின் சந்தத்திற்கு,
'தண்டால் எட்து பஸ்கி - நீ
.தண்ணி வுட்ட விஸ்கி'யை எனது கானா புத்தகத்தில் எழுதினேன்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில், இன்றைய லாலாக்கு டோல் டப்பிம்மாவாகட்டும், கொத்தவால்சாவடி லேடி - நீ கோயம்பேடு வாடியாகட்டும், எல்லாவற்றிற்கும் ஒரு முன்னுதாரணம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அன்புடன்
ஆசாத்

Comments
சந்திரபாபுது எல்லாப் பாட்டுமே அப்படித்தானுங்களே.
அவரு நகைச்சுவையாவே பெரிய விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிடுவாரு இல்லீங்களா.
பிறக்கும் போதும் அழுகின்றான்ல கொஞ்சம் சோககீதம் இசைச்சாரு. நானொரு முட்டாளுங்க சோகம்தான்னாலும் கானா கானாதான். பம்பரக் கண்ணால காதல் சங்கதி சொன்ன தங்கச் செலையையெல்லாம் மறக்க முடியுங்களா. நாமளும் ஜே.பி.சி.க்கு ·பேனுதான். இங்க அந்தப் பாட்ட ஓசிக்கு மட்டும் உதாரணமா எடுத்துக்கிட்டதால அப்படி எழுதியிருக்கேன். மத்தபடி அந்தப் பாட்டை வெறும் நகைச்சுவைன்னு சொல்ல எனக்குத் தைரியம் இல்லீங்க.
சாருக்கு நெல்லைங்களா? அந்தத் தமிழ்ல நல்ல பாட்டு ஒண்ணு இருக்கும்லா.
'புதிரு போடப்போறாளாம் பொட்டப்புள்ள - வெடை
பொசுக்குன்னு சொல்லுவாரு செட்டாம்பிள்ளை'ன்னு அச்சமில்லை அச்சமில்லைல கோபி படிச்சது சூப்பர் நெல்லைத் தமிழ் இல்லீங்களா.
'சங்கு பறிப்போமா ஏளா ஏளா'வுலயும் கொஞ்சம் நெல்லை வாடை இருக்கு.
அடிக்கடி வாங்க :)
அன்புடன்
ஆசாத்