Skip to main content

Posts

மேடைப்பேச்சும் சில பகிர்தல்களும்

முதலில் ஆசிப் அழைத்தபோது மறுத்தேன். 'பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா?' என்றபோது இப்போதைக்கு அதிலெல்லாம் ஆர்வமற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லி 'வேண்டாமே' என்றேன், பிறகு இரண்டொரு நாள் கழித்து பேசினால் என்னவென்று தோன்றியது, 'சரி நான் பேசுகிறேன், நீங்களும் பேசுங்கள்' என்றேன். அவர் பேச இயலாதென்றும் என்னை மட்டும் பேசுமாறும் பணித்தார். 'திரைப்படங்கள் படமா? பாடமா?' என்னும் வாதாடுகளத்தில் பாடங்களே என்று வாதாடினேன். தீர்ப்பென்னவோ படங்கள் படங்கள்தான் என்று கிடைத்தது. தோற்ற அணிக்குத் தலைவனாக இருந்ததில் வருத்தம் ஏதுமில்லை, சல்தாஹை! அன்றைய பேச்சிலிருந்து ஒன்றைப் புரிந்துகொண்டேன். பார்வையாளர்களை பிரமிக்க வைத்து அந்த பிரமிப்பில் பேச்சை நகர்த்திச் செல்லும் உத்தி இன்னமும் காலாவதியாகவில்லை. பேச்சைத் துவங்கியதும் அதிகமாக புழக்கத்திலில்லாத விருத்தங்கள், திருப்புகழ், சித்தர் பாடல்கள் இவற்றிலிருந்து குறிப்புகள் எதுவுமில்லாமல் மனப்பாடமாக வரிகளைச் சொல்லிக்காட்டி அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக பேச்சை நகர்த்துவதை பெருவாரியான மக்கள் விரும்புகின்றார்கள். மேடைப்பேச...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...

கஜினி (இந்தி)

ரியாஸ்கான் தனது பெயரை ரியாஸ் என்று மாற்றிக்கொண்டாரா? இந்தி கஜினியில் அவரது பெயரை கான் இல்லாமல் வெறுமனே ரியாஸ் என்றுதான் காட்டுகிறார்கள். ஆனால், ஐ.எம்.டி.பி.யில் ரியாஸ் கான் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். ஆமீர் கான் - ரியாஸ் கான் என்று வந்தால் நன்றாக இருக்காதென மாற்றினார்களா என்பது தெரியவில்லை. ரியாஸும் ஆமீரும் போட்டுக்கொள்ளும் சண்டைக்காட்சி முழுதையும் கொஞ்சமேயான பாஸ்ட்ஃபார்வேர்டில் எடுத்திருக்கிறார்கள். அதனாலெல்லாம் ஏதோ பயங்கரமான வேகமோ, சண்டைக்காட்சிகளை விறிவிறுப்பாக்கிக் காட்டுவதோ திரையில் நிகழவில்லை. நீளமாக இல்லாமற்போனதற்காக சண்டைக்காட்சிப் பிரியர்கள் அல்லாதவர்களை மகிழ்வித்ததன்றி வேறெதையும் இந்த பாஸ்ட்ஃபார்வேட் உத்தி செய்துகாட்டியதாக எனக்குப் புலப்படவில்லை. நம்மவர்கள் பீட்டர் ஹெய்னும், ஸ்டண்ட் சிவா(வேட்டையாடு விளையாடு)வும்தான் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வழமைபோலவே எனக்குக் குழப்பமாக இருக்கிறது ஹெய்ன் அமைத்த காட்சிகள் எவையெவை, சிவா அமைத்த காட்சிகள் எவையெவை என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை. மும்பை குறுக்குச் சந்துகளில் நிகழும் சண்டைக்காட்சிகளில் ஹெய்ன் கொஞ்சம் தெரிகிறார் என்...

கினோகுனியா புத்தகக்கடை

டிசம்பர் முதல் வாரத்தில், காலையில் துபாய் மாலில் கூட்டம் சேருவதற்கு முன்னரே சென்று சேர்ந்தேன். முன்னமேயே கேள்விப்பட்டதால் நண்பன் சொல்லிவிட்டதால் கடையின் பிரம்மாண்டம் வியப்பில் ஆழ்த்தவில்லை. கடையின் பரப்பளவு மொத்தம் 68850 சதுர மீட்டர்கள் என்கிறார்கள் (நமது கணக்கில் சொல்வதென்றால் 308 கிரவுண்டில் ஒரு புத்தகக்கடை). உள்ளே நுழைந்ததும் பெரிய்ய்ய 'த எர்த்' புத்தகம் வரவேற்கிறது. மொத்தமே 2000 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருப்பதான அறிவிப்பைச் சுமந்து நிற்கும் பெரிய புத்தகம். அட்டையைத் திருப்ப இரண்டு முட்டை குடித்துவிட்டு வரவேண்டும் போன்றதான கனமாக இருக்கிறது. யாரோ ஒரு மலையாளக்கரையோரச் சேச்சி கேரளாவை அதில் பார்த்தால்தான் ஆயிற்று என அடம்பிடித்து விடாப்பிடியாக புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு நகராமல் இருந்தார், வேலைக்காகாது என நான் எனது சுற்றுலாவைத் துவங்கினேன். வழமையான அதிவிற்பனை அடுக்குகளில் துபாயின் புத்தகக்கடைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் காலித் ஹொஸைனியின் கைட் ரன்னரும், எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸும் இங்கேயும் இருந்தன. ராமச்சந்திர குஹாவின் இண்டியா ஆஃப்டர் காந்தியும் இருந்தது. வளைகு...

ஹேமா மாலினி

எழுதியவர்: தமிழன் வேணு சென்னை தேவி தியேட்டரை ஒவ்வொரு முறை காணும்போதும், எனக்கு ஹேமாமாலினியின் நினைவு வரும். அது எனது முதல் சென்னைவிஜயம். மிட்லண்ட் திரையரங்கத்தில் ராஜ்கபூரின் இயக்கத்தில் ’பாபி’யும், சத்யத்தில் ’யாதோன் கீ பாராத்,’படமும் ஓடிக்கொண்டிருந்தன. சென்னைக்கு வந்து தமிழ்ப்படம் பார்ப்பது, புகாரி ஹோட்டலுக்கு வந்து புளியோதரை கேட்பதற்கு ஒப்பான செயலென்று நாகர்கோவிலிலிருந்து வந்திருந்த எங்களுக்குத் தோன்றியது. எனவே பாபி,யாதோன் கீ பாராத் இரண்டுக்கும் டிக்கெட் கிடைக்காமல், தேவிக்கு வந்தபோது அங்கே ஹேமாமாலினி, தர்மேந்திரா,ஷத்ருகன் சின்ஹா நடித்த ’தோஸ்த்’ என்ற படம் ஓடிக்கொண்டிருக்கவே, எப்படியேனும் ஒரு ஹிந்திப் படத்தைப் பார்த்தே தீர்வது என்ற முடிவோடு, படம் ஆரம்பித்திருந்தபோதும், உள்ளே போனோம். தர்மேந்திராவின் பிளாஷ்-பேக்கில் ’காடி புலாரஹி ஹை,’ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ஆஹா! ஒரு வழியாக ஊருக்குப் போய் நண்பர்களிடம் பிரதாபித்துக்கொள்ள, ஒரு ஹிந்திப்படம் பார்க்கிற லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியோடு உட்கார்ந்தால், சில நிமிடங்கள் கழித்து அடுத்த இன்ப அதிர்ச்சியாக, திரையில் ஹேமாமாலினியின் முகம் ஒரு மின்னலை...

சாதனா

எழுதியவர்: தமிழன் வேணு ஹிந்தித்திரைப்படத்துறையில் சில வினோதமான காதல் கதைகள் அவ்வப்போது நிஜத்திலும் நடந்தேறுவதுண்டு. மதர் இந்தியா படத்தில் நர்கீஸுக்கு மகனாக நடித்த சுனில் தத், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு தீ விபத்திலிருந்து நர்கீஸைக் காப்பாற்றியதால், இருவருக்கும் காதல் மலர்ந்து, பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர். புற்றுநோயால் மறைந்த நர்கீஸின் பெயரில் சுனில் தத், ஒரு அறக்கட்டளை நிறுவியதும், அமெரிக்காவில் மரணத்தோடு போராடிய நர்கீஸின் வலிகளை தர்த் கா ரிஷ்தா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிந்த விஷயம். அந்தப் படத்தில் சுனில்தத்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான்வர் தான் குஷ்பு. இதே போல ஷஷாதர் முகர்ஜி என்ற தயாரிப்பாளர், தன் மகன் ஜாய் முகர்ஜியைக் கதாநாயகனாகப் போட்டு எடுத்த லவ் இன் ஷிம்லா என்ற படத்தின் படப்பிடிப்பின்போது, கதாநாயகி சாதனாவும், இயக்குனர் ஆர்.கே.நய்யாரும் காதல்வசப்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னாளில் ஆர்.கே.நாயர் தயாரிக்க, பிரோஸ் கான், சுனில் தத் நடிக்க, சாதனாவே கீதா மேரா நாம் என்ற ஒரு படத்தை இயக்கினார். வடிகட்டிய மசாலாப் படமான அந்தப் படம்...

மீனா குமாரி

அஜ்மானில் சுற்றிவிட்டு எமிரேட்ஸ் நெடுஞ்சாலையில் பயணித்து ராஷிதியா, விமான நிலையம் என வலம் வந்து பழைய தழல் வட்டச்சுற்று (பிளேம் ரவுண்ட் அபவுட்) புதிய டனாட்டா நிறுத்தம் கடந்து கடிகாரக் கோபுரத்தை அடையுமுன் ஒரு விவரத்தை பண்பலையில் கேட்டேன். மீனா குமாரியின் இயற்பெயர் மஹ்ஜபீன். தந்தையார் அலி பக்ஷ், தாயார் இக்பால் பேகம். குழந்தையாக இருக்கும்போதே பார்சி திரையில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியிருக்கிறார். மேற்சொன்னது இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவல்கள்தான். அடுத்து சொன்னது இணையத்தில் அவ்வளவு எளிதில் கிடைக்ககூடிய தகவல் அன்று. குழந்தையாக நடிக்க முடியாமலும் குமாரியாக நடிக்க முடியாமலும் இருந்த பருவத்தில் இரண்டு வருட ஓய்விற்குப் பின் மீனா குமாரி என்னும் பெயருடன் இந்தித் திரையில் நட்சத்திரமாகியிருக்கிறார். இவர் நடித்து வெளிவந்த முதல் இரண்டு படங்களுமே தோல்வியடைந்திருக்கின்றன. மூன்றாவது படத்திலிருந்துதான் வெற்றி கிடைத்திருக்கிறது. அநேகமாக படத்தின் பெயர் மத்ஹோஷ். இன்னொரு விவரம் வானொலியில் வரும்போது எனது வண்டி கடிகாரக்கோபுர வட்டச்சுற்றுள் நுழைந்து வலது திரும்பி அபூபக்கர் சித்தீக் சாலையில் பயணிக்கவேண்டும் இ...