Skip to main content

Posts

தமிழக மாணவனின் சாதனை - யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை

ரூபிக்ஸ் கனசதுரம் (ரூபிக்ஸ் க்யூப்) 5x5x5ஐ கண்களைக் கட்டிக்கொண்டு போடும் உலகளாவிய போட்டியில் தமிழக மாணவன் பெர்னெட் ஒர்லாண்டோ முதலிடம் பெற்றிருக்கிறார். பெர்னெட் திருச்சிக்காரர். பயில்வது, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பாரதியார் சாலையில் அமைந்துள்ள செயிண்ட் ஜேம்ஸ் மேநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு. பெர்னெட்டின் தந்தையார் ஜான் லூயிஸ் அவர்களுடன் எனக்கு அறிமுகம் உண்டு. அவரும் ரூபிக்ஸ் கனசதுரத்திலும், நினவாற்றலிலும் பன்னாட்டு அளவில் சாதனைகளை செய்திருப்பவர். ஒரு விழாவில் ஜான் லூயிஸ் அவர்களின் நினைவாற்றலை மேடையில் வெளிக்காட்ட அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் பொறுப்பினை எனக்குத் தந்திருந்தார்கள். எண்களை அரங்கத்தினர் சொல்லச்சொல்ல லூயிஸ் அவற்றை நினைவில் வைத்து வரிசைக்கிரமமாக திருப்பிச் சொல்வதும், தேதி சொன்னால் கிழமை சொல்வதுமாக சில நினைவாற்றல் விளையாட்டுகளை மேடையில் செய்துகாட்டினார். அரங்கத்தினருக்கும் ஜான் லூயிஸுக்கும் இடையில் தபால்காரர் வேலையை அன்று நான் செய்தேன். அரங்கத்தில் இருந்த சில இளைஞர்களிடம் முன்பே சொல்லிவிட்டு இரண்டு மூன்று நடிகைகளின் பிறந்த தேதியினை குறித்துச் சென்றிருந்தேன். அவற...

ஈகைப் பெருநாள் - சில எண்ணங்கள்

1/4 காலையிலிருந்து நண்பர்கள் உறவினர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்திகள். நன்றிகளும் வாழ்த்துகளுமாக நேரம் போவதே தெரியவில்லை. தொழுகை முடிந்து வந்ததும் வராததுமாக தொலைபேசி ஒரு கையிலும், விசைப்பலகை ஒருகையிலுமாக தொலைதொடர்பில் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்வது காலத்தின் கட்டாயம். இனிப்புப்பொட்டலங்களை எடுத்துச் சென்று அக்கம் பக்கத்தார்க்குத் தருகின்ற பணி குழந்தைகளுக்கு பெருமிதத்தை அளிக்கின்றது. அக்கம்பக்கத்து வீட்டிற்குச் சென்று நட்பு வளர்க்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த பண்டிகைக் காலங்களும் உதவுகின்றன. இன்றைய அடுக்குமாடி + இணையக் கலாசாரத்தில் பிறந்தநாள்களும், பண்டிகைகளும் இல்லையென்றால் ஆயிரம் சதுர அடிக்குள்ளேயே உலகம் அடங்கிவிடுமோவென நினைக்கத் தோன்றுகிறது. ***** 2/4 சென்ற வாரத்தில் ஈகைப்பெருநாள் குறித்த விவரண அட்டை ஒன்றைத் தயாரிக்கும்படி குழந்தையிடம் பள்ளிக்கூடத்தில் சொல்லியிருந்தார்கள். வண்ண அட்டையில் பெருநாளைப் பற்றி குழந்தையின் ஆசிரியர் சில வரிகள் எழுதிக்கொடுத்தொருந்தார். அதனைச் சுற்றி வேலைப்பாடுகளைச் செய்யும் பணியை இரண்டு குழந்தைகளிடம் ஒப்படைத்திருந்தார்கள். நோட்டுப்புத்தகமென்றால் ...

ரேகா 53

சலாமேஇஷ்க் மேரி ஜான் ஸரா கபூல் கர்தோ தும் ஹம்ஸே ப்யார் கர்னே கி ஸரா ஸிபூல் கர்தோ மேரா தில் பே சைன் ஹை ஹம்ஸஃபர் கே லியே! ஆஷாவின் குரலில் இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ரேகாஜியின் நடனம் நினைவிற்கு வரும். சூழலை அமைதியாக வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது திரைக் காட்சி மனதில் தோன்றும். பின்னாளில் (1981) உம்ராவ்ஜானாக நடிப்பதற்கான ஒத்திகையைத்தான் அவர் முக்கத்தர்கா சிக்கந்தரில் (1978) செய்து பார்த்தாரோ என இப்போது நினைக்கத் தூண்டும் நடனம். மொஹலே ஆஸம் திரைப்படத்தில் ஒரு வசனம். பட்டத்து இளவரசனின் வெற்றியைப் பறைசாற்ற ஒரு சிலை வடிக்கச் சொல்கிறார்கள். அப்பொழுது சிற்பி சொல்கிறான், "இதனைக் கண்டதும் வீரன் தனது வாளையும், மன்னன் தன் முடியையும், மனிதன் தன் இதயத்தையும் தந்துவிடுவான்" . இது புகழ் பெற்ற வசனம். 2005ம் வருடம் நடந்த 50வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில், ரேகாஜியை மேடைக்கு அழைத்தபோது (...மேடையில் இருந்தபோது) சத்ருக்கன் சின்ஹா அவர்கள் இந்த வசனத்தை சொல்லி ரேகாவைப் புகழ்ந்தார். 'ஜிஸ்கா நாம் சுன்தேஹி சிப்பாய் அப்னா தல்வார், ஷெஹென்ஷா அப்னா தாஜ் அவுர் இன்ஸான் அப்னா ...

தலைக்கவசம் அணியாதது மட்டுமே விதிமீறலா?

மோட்டார் வாகன சட்டப்படி, அரசு ஆணையின்படி, உடனடி அபராதத்திற்குரிய (spot fine) விதிமீறல் சிலவற்றை இங்கே பட்டியலிட விருப்பம். தலைக்கவசம் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படாமல் கீழ்க்காணும் விதிமீறல்களையும் காவலர்கள் சரியாகக் கண்காணித்து அபராதம் விதிக்கத் துவங்கினால் அரசுக்கும் வருமானம் கிடைத்ததாகும், போக்குவரத்தும் இன்னும் சீரானதாக அமையும் என்பது எனது எண்ணம். (உரிமம், புதுப்பித்தல், தஸ்தாவேஜுகள், எண் பலகை தொடர்பானவற்றை விலக்கிவிட்டு சாலைவிதிகள் தொடர்பான முக்கியமான சிலவற்றை மட்டுமே எழுதுகிறேன்) 1. நிறுத்தக் கோட்டை மீறி நிற்பது. 2. முறையற்றபடி தடம் மாறுவது (lane jumping). 3. மஞ்சள் கோட்டைத் தாண்டுவது. 4. தடை செய்யபட்ட வழியில் செல்வது (driving in no entry). 5. சிவப்பு /ஆரஞ்சு விளக்கு சமிக்கையை மீறுவது. 6. திருப்பக்கூடாத இடத்தில் திருப்புவது (turning in no U turn) 7. தடை செய்யபட்ட இடத்தில் நிறுத்துவது. [1 முதல் 7 வரை பிரிவு 119] 8. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது (பிரிவு 122) 9. அழைக்கும் இடத்திற்கு வரமறுத்தல் (வாடகை வண்டிகளுக்கு) - TNMV Rule 40(e) 10. அனுமதிக்கப்படாத உயரத்திற்கு பாரம் ...

இவர்கள் என்ன கழைக்கூத்தாடிகளா?

உயரே போகும்போது அச்சம் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயரே செல்ல உதவும் இயந்திரங்களில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள். என்னதான் மேலே போனாலும் விழமாட்டோம் என்னும் நம்பிக்கையை பாதுகாப்பு ஏற்பாடுகள் தந்ததால் உயரம் ஒரு பொருட்டாகத் தெரியாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், ஏறக்குறைய எழுபது அடிகள் உயரத்தில் பணியாளர்கள் இரும்புப் பாளங்களைப் பிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது ஒரு திகைத்து நிற்பதையும், இப்படிப் படம் எடுத்து வலைப்பூவில் இடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது. அரசின் சமீபத்திய ஆணையின்படி அனுமதிக்கப்படாத விளம்பரப் பலகைகளை எடுக்கும் பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்ணாசாலையில் அதிஉயரத்திலிருந்த சில விளம்பரப் பலகைகள் பிரிக்கப்பட்டு, போக்குவரத்திற்காக காத்திருக்கும்போது ஆகாயத்தைக் கொஞ்சம் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அப்படி அதிகமாகத் தெரிந்த ஆகாயத்தை ரசிக்கும்போது கூடவே இந்தக் காட்சியும் நினைவுக்கு வருகின்றது. அங்கே இருந்த விளம்பரதாரரின் ஒரு கடையின் கால்மணிநேர மின்சாரச் செலவுகூட இவர்கள் அனைவரின் ஒருநாள் கூலியைவிட அதிகமாக இ...

வாகன நிறுத்தமும் விதி மீறல்களும்

நிறுத்தங்களின்போது பட்பட்டென வேகத்தைக் குறைத்து கொஞ்சம் ஒதுங்கி இருசக்கரவாகனத்திலிருந்து இறங்காமல் உட்கார்ந்த நிலையிலேயே இடது காலால் சைடு ஸ்டாண்டை தள்ளிவிட்டு வண்டியை சரித்துவிட்டு வலது காலை அரைவட்டமடித்து வண்டியிலிருந்து இறங்காவிட்டால் நீங்கள் இன்னமும் இருசக்கரத்துக்கு பழக்கப்படவில்லை அல்லது வயதாகிவிட்டதாக உணர்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். எல்லா நிறுத்தங்களிலும் இப்படி சைடு ஸ்டாண்ட் போட்டுவிடமுடியாது. இந்து பத்திரிகை அலுவலக வளாகத்தில் இருக்கும் இருசக்கர நிறுத்தத்தில் எழுதியே வைத்திருப்பார்கள். 'சைடு ஸ்டாண்ட் போடாதீர்கள்' என. அங்கே ஒழுங்குபிள்ளையாக வண்டியிலிருந்து இறங்கி செண்டர் ஸ்டாண்டைப் போடலாம். நீண்ட நேரம் நிறுத்தவேண்டியிருந்தால் செண்டர் ஸ்டாண்ட். இல்லையென்றால், அலட்சியமாக வண்டி கழுத்தைத் திருப்பிப் பார்ப்பதான பாணியில் சைடு ஸ்டாண்டே அழகு. ஒழுங்கற்ற சைடு ஸ்டாண்ட் நிறுத்தத்தை அத்தனை ஒழுங்காகப் பழகியிருக்கிறோம். இந்த சைடு ஸ்டாண்டுக்கும் டீக்கடைகளுக்கும் பெட்டிக்கடைகளுக்கும் ஜென்மஜென்மமாய்த் தொடர்புபோல. சொல்லிவைத்ததுபோல் டீக்கடை, பெட்டிக்கடைகளின் முன்னே நிற்கும் வண்டி எதுவாக இ...

ராம் கோபால் வர்மா கி ஆக் - வர்மா ஏமாற்றிவிட்டார் :-(

ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான கதாநாயகி நிஷா கோத்தாரியா, ஜேம்ஸ் போல இன்னொன்றை எடுத்திருக்கலாம். முன்னாள் கதாநாயகி ஊர்மிளாவுக்கு வாய்ப்பு தரவேண்டுமா, பூத் போல இன்னொன்றை எடுத்திருக்கலாம். சுஷ்மிதா சென் மீது நல்லபிப்ராயமா, வாஸ்து போல இன்னொன்றை எடுத்திருக்கலாம். இவற்றை விடுத்து ஷோலேயை திரும்ப எடுக்கிறேன் என இப்படி ரசிகர்களை தண்டித்திருக்கக்கூடாது. ஷாருக்கின் டான், அமிதாபின் டான் அளவிற்கு இல்லை, பொருட்செலவைத் தவிர்த்து. ராம் கோபால் வர்மாவின் 'ஆக்', எதிலும் சிப்பி சாஹேபின் ஷோலேயின் அருகில்கூடச் செல்லவில்லை. டான், ஆக் இவையிரண்டையும் பார்த்தபின், கருப்பு வெள்ளையை வண்ணமாக்கி மொஹல்-ஏ-ஆஸத்தை வெளியிட்டு அதனை வெற்றிப்படமாக்கியவர்கள் இந்தித் திரை உலகிற்கு செய்த சேவை, மேற்படி மறுதயாரிப்பு - சந்தைப் பிரபல - விளம்பர விரும்பி நிறுவனங்களைவிடவும் பல படிகள் மேல். திரும்பத் திரும்ப பலமுறை பார்த்தாலும் சலிக்காதிருக்கும் ஷோலே எங்கே, முதன்முறை பார்க்கும்போதே அங்கங்கே பலமுறை சோம்பல் முறிக்க வைத்த ஆக் எங்கே. ஷோலே வணிகப் படம்தான், மசாலாதான், ஆனாலும் கதையமைப்பும் வசனமும் இன்று வரையிலும் காலாவதியாகிப்போனதாக...