சலாமேஇஷ்க் மேரி ஜான் ஸரா கபூல் கர்தோ
தும் ஹம்ஸே ப்யார் கர்னே கி ஸரா ஸிபூல் கர்தோ
மேரா தில் பே சைன் ஹை ஹம்ஸஃபர் கே லியே!

ஆஷாவின் குரலில் இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ரேகாஜியின் நடனம் நினைவிற்கு வரும். சூழலை அமைதியாக வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது திரைக் காட்சி மனதில் தோன்றும். பின்னாளில் (1981) உம்ராவ்ஜானாக நடிப்பதற்கான ஒத்திகையைத்தான் அவர் முக்கத்தர்கா சிக்கந்தரில் (1978) செய்து பார்த்தாரோ என இப்போது நினைக்கத் தூண்டும் நடனம்.
மொஹலே ஆஸம் திரைப்படத்தில் ஒரு வசனம். பட்டத்து இளவரசனின் வெற்றியைப் பறைசாற்ற ஒரு சிலை வடிக்கச் சொல்கிறார்கள். அப்பொழுது சிற்பி சொல்கிறான், "இதனைக் கண்டதும் வீரன் தனது வாளையும், மன்னன் தன் முடியையும், மனிதன் தன் இதயத்தையும் தந்துவிடுவான்". இது புகழ் பெற்ற வசனம். 2005ம் வருடம் நடந்த 50வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில், ரேகாஜியை மேடைக்கு அழைத்தபோது (...மேடையில் இருந்தபோது) சத்ருக்கன் சின்ஹா அவர்கள் இந்த வசனத்தை சொல்லி ரேகாவைப் புகழ்ந்தார். 'ஜிஸ்கா நாம் சுன்தேஹி சிப்பாய் அப்னா தல்வார், ஷெஹென்ஷா அப்னா தாஜ் அவுர் இன்ஸான் அப்னா தில் நிகால்கே ரக்தேதேன் ஹை'.
இந்தித் திரையில் எல்லோருடனும் நட்பாகவும் தனக்கென்று இன்றைக்கும் ஒரு இடத்தையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்திருக்கிறது. அமிதாபுடன் அவருக்கு இருந்த ஈர்ப்பு திரையில் ஆர்வமிருக்கும் அனைவரும் அறிந்தது.
பழம்பெரும் இந்தி நடிகர் ஜீவனின் மகன் கிரன் குமாருடனும் இவருக்கு ஈர்ப்பு இருந்ததாகவும் திருமணத்திற்கு ஜீவன் சம்மதிக்காததால் அந்தக் காதலும் நிறைவேறாமற்போனதாகவும் செய்திகள் உண்டு.
இந்தத் தோல்விகளால் அவரது தனிபட்ட கவுரவமோ, நடிப்புத் தொழிலோ எதுவும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இந்திப்பட விருது வழங்கும் விழா ஒன்றில், அபிஷேக் பச்சன் நடனம் ஆடிய காட்சியைக் காட்டியவுடன் ரேகாஜியையும் காட்டினார்கள். அவர்கள் எதனை நினைத்து அப்படி எடிட்டிங் செய்தார்களோ, எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்ததும் ஒரு கவிதை உருவானது. அதை நண்பர்கள் மரத்தடி டாட் காமில் வலையேற்றி கவுரவித்திருக்கிறார்கள்.
ரேகாஜி தமிழ்ப்பெண்ணாகவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது சிலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். இம்மான் தரம், இதுதான் அந்தப் படத்தின் பெயர். மும்பையில் கட்டடவேலை பார்க்கும் சித்தாளாக நடித்திருப்பார். 'கொஞ்சம் கொஞ்சம் அய்யய்யய தோடா தோடா அய்யய்யய்ய' என விளங்காமற்போன ஒரு பாடலும் பாடுவார். இப்படியான சில்லறைப் படங்கள் (அமிதாப் - சசிகபூர் நடித்துமே) பலவற்றில் நடித்திருந்தாலும், ஒருகாலகட்டத்தில் பருமனான உடலமைப்புள்ள நடிகையாக இருந்திருந்தாலும், நடித்திருக்கும் 175 படங்களில் (ஐ.எம்.டி.பி.க்கு நன்றிகள்) வெற்றிப்படங்களென இருபது இருபத்தைந்தையே சொல்ல முடியும் என்றபோதும், இந்தித் திரையில் என்னை ஈர்த்திருப்பவர்களுள் ரேகாஜி முக்கியமானவர்.
அவருக்கு வயது 53என இன்று செய்தித்தாள்களில் படித்தேன். வயது கடந்தாலும் மாறாத இளமைப்பொலிவு சிலருக்கு வாய்த்துவிடுகிறது, ரேகாஜிக்கும். வாழ்த்துகள்!
துவக்கத்தில் எழுதியிருக்கும் ப்ரகாஷ் மெஹ்ராவின் வரிகளுக்கான தமிழாக்கம்:
காதல் வந்தனம் என்னுயிரே
ஏற்றுக்கொள்ளேன்!
என்ன விரும்பும் தவறை
நீ செய்துவிடேன்!
நான் உன்னை நினத்து நிம்மதியற்றிருக்கிறேன்!
அன்புடன்
ஆசாத்

Comments
'மீண்டும் கோகிலா" படத்தின் இந்தி வர்ஷனில் இவர் நடித்திருந்தாரோ?
இந்தி வர்ஷன் குறித்து அறியேன். ஆனால், தமிழில் முதலில் தீபாவின் பாத்திரத்தில் இவர் நடித்து காட்சிகள் எடுக்கபட்டன. பிறகு, படத்திலிருந்து இவர் விலகிக்கொண்டார்.
தீபாவின் பாத்திரத்தில் இவர் இருந்த படங்கள் பல பத்திரிகைகளில் அந்நேரத்தில் பிரசுரமாகியிருந்தது.
*
இனிய துளசியக்கா,
எந்நேரமும் புன்னகை, மனப் பயிற்சி, உணவு, உடற்பயிற்சி - தசைகளுக்கு, சருமத்தின் முதுமையைக் குறைக்க சில பூச்சுகள்...இப்படியாக சிலவற்றை முறையாக, தவறாமல் கடைப்பிடித்து முதுமைத் தோற்றத்தை ஓரளவிற்கு தள்ளிப்போடுகிறார்கள்.
முயற்சிகள்தான்...
அன்புடன்
ஆசாத்