ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான கதாநாயகி நிஷா கோத்தாரியா, ஜேம்ஸ் போல இன்னொன்றை எடுத்திருக்கலாம்.
முன்னாள் கதாநாயகி ஊர்மிளாவுக்கு வாய்ப்பு தரவேண்டுமா, பூத் போல இன்னொன்றை எடுத்திருக்கலாம்.
சுஷ்மிதா சென் மீது நல்லபிப்ராயமா, வாஸ்து போல இன்னொன்றை எடுத்திருக்கலாம்.
இவற்றை விடுத்து ஷோலேயை திரும்ப எடுக்கிறேன் என இப்படி ரசிகர்களை தண்டித்திருக்கக்கூடாது.
ஷாருக்கின் டான், அமிதாபின் டான் அளவிற்கு இல்லை, பொருட்செலவைத் தவிர்த்து.
ராம் கோபால் வர்மாவின் 'ஆக்', எதிலும் சிப்பி சாஹேபின் ஷோலேயின் அருகில்கூடச் செல்லவில்லை.
டான், ஆக் இவையிரண்டையும் பார்த்தபின், கருப்பு வெள்ளையை வண்ணமாக்கி மொஹல்-ஏ-ஆஸத்தை வெளியிட்டு அதனை வெற்றிப்படமாக்கியவர்கள் இந்தித் திரை உலகிற்கு செய்த சேவை, மேற்படி மறுதயாரிப்பு - சந்தைப் பிரபல - விளம்பர விரும்பி நிறுவனங்களைவிடவும் பல படிகள் மேல்.
திரும்பத் திரும்ப பலமுறை பார்த்தாலும் சலிக்காதிருக்கும் ஷோலே எங்கே, முதன்முறை பார்க்கும்போதே அங்கங்கே பலமுறை சோம்பல் முறிக்க வைத்த ஆக் எங்கே. ஷோலே வணிகப் படம்தான், மசாலாதான், ஆனாலும் கதையமைப்பும் வசனமும் இன்று வரையிலும் காலாவதியாகிப்போனதாக உணர முடியவில்லை.
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரப் பின்னணி, ராம் கர் கிராமம், கிராமமே கொள்ளைக்காரர்களின் பிடியில் என்று வடக்கில் ஒரு பகுதியின் சமூகச் சூழலை கதைக் கருவாகக் கொண்டு ஷோலே உண்டாக்கிய தாக்கத்தின் அளவு அதிகம். அப்படிப்பட்ட சமூகப் பிரச்சனையை கதைக்கருவாக வைத்து வெளிவந்த ஷோலேயின் மறுதயாரிப்பில், ஆளாளுக்கு அரைத்து சலித்துப்போன நிலச்சொத்து (ரியல் எஸ்டேட்) மாவை கதைக்கருவின் மையமாக வைத்தது வர்மாவின் மிகப்பெரிய தவறு.
பழைய ஷோலே ரசிகர்களுக்கும் படத்தில் எதுவும் இல்லை; பார்ட்னர் படத்தைப் பார்க்கும் இளையவர்களுக்கும் ஒன்றும் இல்லை.
அமிதாபின் மேல் விழுந்திருக்கும் பிரபலம் என்னும் நிழல் தருகின்ற முன்முடிவால்தான் அவரது நடிப்பை ஏற்றுக்கொள்ள முடிகிறதே தவிர மற்றபடி கப்பர் சிங் (அம்ஜத்கான்) உண்டாக்கிய தாக்கம் எதையும் பபன் சிங் (அமிதாப்) உண்டாக்கவில்லை.
'தேரா க்யா ஹோகா காலியா'
'சர்க்கார் மேனே ஆப்கா நமக் காயா'
'அப் கோலி காவோ'
இன்றும் ரசிக்க முடிகிறது. அதே காட்சியின் மறுபதிப்பை முதன்முறை பார்க்கவும் இயலவில்லை.
தனது திரைப்பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படமான ஷோலேயின் மறுபதிப்பில் அம்ஜத்கானின் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் ஷோலேக்கான மரியாதையை அமிதாப் தந்ததாக நினைத்திருக்கலாம். ஆனால், நடந்திருப்பதென்னவோ வேறு. ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டு தொடர்கொலைகள் செய்யும் வில்லனைப்போலத்தான் அவரது நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. மேலும், ஏற்கெனவே அக்ஸ் திரைப்படத்தில் அமிதாபின் இத்தகைய மனநிலை பாதிக்கபட்ட கொலையாளி பாத்திரப்படைப்பை ஏற்கெனவே பார்த்துவிட்டதால் அலுப்பு தட்டுகிறது.
மோகன்லால் தன்னால் இயன்ற அளவிற்கு உழைத்திருக்கிறார். மாறுவேட கடத்தல் வேட்டை சண்டைக் காட்சி தவிர்த்து மோகன்லாலை வேறெந்தக் காட்சியிலும் குறைகூற முடியாது. சுஷ்மிதாவும் அப்படியே. மொத்தப் படத்திலும் அற்புதமான நடிப்பு என்றால் சுஷ்மிதாதான். வசன உச்சரிப்பு, பதட்டம், பொறுமை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். பலன் என்ன? திரையில் ஒட்டுமொத்தக் கூட்டணியென்று வருகையில் சுஷ்மிதாவின் நடிப்பு வீணடிக்கப்பட்ட ஒன்று.
பழைய ஷோலேயின் காட்சி ஒன்று. இரவில் ஒவ்வொரு விளக்காக ஜெயாபாதுரி அணைத்துக்கொண்டே வர, தூரத்தில் மங்கிய ஒளியில் அமிதாப் மவுத்ஆர்கன் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி. அப்படி ஒரு காட்சியை படம் முழுதும் தேடினேன், கிடைக்கவில்லை.
சஞ்சீவ் குமாரின் கைகளை அம்ஜத்கான் வெட்டுவதற்கு முன் பேசப்படும் வசனங்கள், சஞ்சீவ் குமாரின் பின்னே நின்றுகொண்டு வாள்களை தோளின்மேல் உரசிக்கொண்டே 'யே ஹாத்' என்ற உச்சஸ்தாயி வசனங்கள் இதில் நீர்த்துப்போனவையாக வெளிவந்திருக்கின்றன.
ஷோலேயில் தன்னைக் கைதுசெய்ததற்காக கப்பர், தாக்கூரின் கைகளை வெட்டுவான். ஆக்கில் அமிதாபின் பாத்திரப்படைப்பின் கொடூரத்தை குறைத்துக் காட்டவேண்டுமென நினைத்தார்களோ இல்லை வில்லனுக்கும் குடும்பப் பாசம் உண்டென்று காட்ட நினைத்தார்களோ தேவையில்லாமல் வில்லனுக்கு ஒரு தம்பியைக் (சச்சின்) காட்டி துப்பாகிச் சண்டையின்போது தவறுதலாக அவர் குண்டடிபட்டு இறப்பதாகவும், அதற்கான பழிவாங்குதலே நரசிம்மாவின் (மோகன்லால்) விரல்களை பபன் வெட்டுவதான காட்சியமைப்பு. ச்சீயென்றாகிவிட்டது.
படத்தின் உச்சகட்ட முட்டாள்தனம் ஹேமமாலினியின் பாத்திரத்திற்கு நிஷா கோத்தாரியைத் தேர்வு செய்தது. ஷோலேயில் ஹேமாவுக்கு குதிரைவண்டியென்றால், இதில் நிஷாவுக்கு தானி (ஆட்டோ). அதில் ஹேமாஜி தனது குதிரைக்கு 'கன்னே' எனப் பெயரிட்டு அழைப்பதும், 'கோயி ஹசீனா ஜப் ரூட்டு ஜாயீ ஹைதோ' பாடலில் குதிரை வண்டியை ஓட்டிக்கொண்டே பொய்க்கோபத்தில் சிணுங்குவதுமாகட்டும், தாக்கூரின் வீட்டிற்கு வழிதேடி வரும் அமிதாப், தர்மேந்திராவிடம் படபடவென இடைவிடாமல் பேசிக்கொண்டே வருவதுமாகட்டும், பசந்தி இன்றைக்கும் ரசிக்கக்கூடிய கதாபாத்திரம். 'ஜப்தக் ஹை ஜான் ஜானே ஜஹான் மை நாச்சூங்கி' ஒரு பாடல் போதாதா? ஆக்கில் நிஷாவைப் பார்த்தாலே அரங்கைவிட்டு எழுந்து சென்றுவிடத் தோன்றுகிறது. ஒரு கதாபாத்திரத்தை இதை விடவும் அதிகமாகக் கேவலப்படுத்த முடியாது.
நீண்ட நாள்களாகவே திரையில் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட ஆடைக்குறைப்பு, சிருங்கார அசைவுகளால் இளையவர்களை ஈர்க்க முயற்சி செய்யலாமே தவிர, பசந்தியின் மறுபதிப்பான ஒரு பாத்திரத்தில் நிஷா நடிக்கவேண்டுமென்றால் அது ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பாக இருக்கக்கூடாது. காரணம், தயாரிப்பாளருக்கு நிஷா கோத்தாரியை நடிக்கவைப்பதை விட நனையவைப்பது பிடித்திருக்கிறது.
உயரமான தண்ணீர்த்தொட்டியின்மேல் ஏறிக்கொண்டு தன்னை பசந்தி திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வே என தர்மேந்திரா ஊர் மக்களையும் பசந்தியின் பாட்டியையும் மிரட்டும் நகைச்சுவைக் காட்சி இதில் ஒட்டு மொத்த கேலிக்கூத்து. கதையமைப்பே கேலிக்கூத்தாக இருக்கும்போது அஜய்யால் என்னதான் செய்திருக்கமுடியும். புதுமுகம் ராஜ் பாவம். அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. ஷோலேயில் அமிதாப் - ஜெயா திரை ரசாயனம் அற்புதமாக அமைந்திருந்தது. இதில் ஒன்றையும் காணவில்லை.
'மெஹ்பூபா மெஹ்பூபா' அப்போது திருவல்லிக்கேணியில் அரங்கிற்கு முதன்முறையாக ஷோலே பார்க்கச் செல்வோர்ர்க்கு அறிவுரையே கிடைத்தது. 'பா, இண்டர்வெல்கே பாத் ஃபடாபட் சீட்கோ ஆஜானா, வஹி மெஹ்பூபா மெஹ்பூபா கானா ஷுரூ ஹாஜாயேகா' (ஏம்பா, இடைவேளைக்கப்புறம் உடனே வந்துரு, மெஹ்பூபா மெஹ்பூபா பாட்டு ஆரம்பிச்சுரும்). இதிலும் எதிர்பார்த்தேன். அன்று ஹெலன், இன்று யார் என்பதே பெரிய கேள்விக்குறி. அப்படியிருக்கையில் ஊர்மிளா மடோன்கரை நடனமாடச் செய்து அவரும் ஏகப்பட்ட இரைச்சலின் நடுவே கையைக் காலை ஆட்டி அவர் பங்கிற்கு நம்மை அவதிப்படுத்திவிட்டுப் போகிறார். குறைந்தபட்சமாக 'மெஹ்பூபா மெஹ்பூபா' பாடலையாவது மறுகலவை செய்திருக்கலாம் பஞ்சிம்தாவுக்கு (ஆர்.டி.பர்மன்) நினைவாஞ்சலியாக கண்ணை மூடிக்கொண்டு பாடலை ரசித்துப்போயிருக்கலாம்.
மொத்தத்தில் ஷோலேயின் பெயரால் ராம் கோபால் வர்மா அடித்திருக்கும் கேலிக்கூத்துதான் இந்தப் படம்.
ஷோலே - ஆக்
அமிதாப் - ராஜ் (புதுமுகம்)
தர்மேந்திரா - அஜய்தேவ்கன்
அம்ஜத்கான் - அமிதாப்
சஞ்சீவ் குமார் - மோகன்லால்
ஹேமாமாலினி - நிஷா கோத்தாரி
ஜெயா பச்சன் - சுஷ்மிதா சென்
மேக்மோஹன் (சாம்பா) - சுஷாந்த் சிங்
ஏ.கே.ஹங்கல் - வீரேந்த்ர சக்சேனா
ஹெலன் - ஊர்மிளா மடோன்கர்
மைல்கல் - ஜல்லி
அன்புடன்
ஆசாத்

Comments
புதிய உம்ராவ்ஜானில் ஐஷ்வர்யா - அபிஷேக் திரை ரசாயனம் அத்தனை சிறப்பாக இல்லை.
பாடல்கள் நன்றாகத்தான் இருந்தன. ஐஷ்வர்யாவின் நடனமும் ரேகாஜி அளவிற்கு இல்லையென்றாலும் குறை சொல்ல முடியாதா அளவில்தான் இருந்தன.
என்னவோ ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள்.
அன்புடன்
ஆசாத்