Skip to main content

ஒரு நிழற்படம்

முதன்முதலில் அந்த நிழற்படத்தை எங்கே பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. வலப்புறம் ஜெயலலிதா அம்மையாரும் இடப்புறம் கலைஞரும் நடுவில் புரட்சித் தலைவரும் நிற்கின்ற படம். செய்தியில் தெளிவாக இது ’எங்கள் தங்கம்’ படத்தின் துவக்க விழாவோ பாராட்டு விழாவோ எதோ ஒன்றில் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நண்பர் ரஜினி ராம்கி அவர்களுடன் அம்மையார் + எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படங்களின் வரிசை குறித்து ஒரு சில வரிகள் பேசியபோது இந்தப் படம் எங்காவது கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டியிருந்தேன், அவருடைய முயற்சிக்குப் பிறகும் கிடைக்கவில்லை. இது நடந்து நான்காண்டுகளாவது இருக்கும். அப்படி வந்துவிட்டுப் போன நிழற்படத்தை 3.11.2010 ஆனந்தவிகடனில் பார்த்தேன்.

முதல் ஆச்சரியம்:
படத்தை இதற்கு முன் வெளியிட்டிருந்த பத்திரிகை (எதுவென்று எனக்கு நினைவில் இல்லை) படத்தில் இருந்து கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.எஸ் அவர்களின் படத்தை வெட்டிவிட்டு வெளியிட்டிருந்தார்கள். இப்போது விகடனில் வெளிவந்திருக்கும் படத்தில் ஏ.எல்.எஸ் அவர்களின் படம் இருக்கின்றது. முந்தைய தேதியில் நிழற்படத்தைப் பார்த்த ஆசிரியருக்கோ அல்லது உதவி ஆசிரியருக்கோ ஏ.எல்.எஸ்.ஸின் முகம் தெரியாமல் இருந்திருக்கலாம். தெரியாத ஒரு நபர் திரையுலக + அரசியல் தலைவர்களுடன் இருக்கையில் வெளியிட்டு யாரேனும் ‘இவர் யார்’ என்று கேள்வி கேட்க அது தெரியாமற்போக எதற்கு தொடரும் உரையாடல்கள் என நினைத்து வெட்டியிருக்கலாம். ஒரு படத்திலிருந்து ஒரு நபரை வெட்டிவிட்டு வெளியிடுவது ஒன்றும் இமாலயத் தவறில்லை. சிலர் தங்கள் முகம் தெரியவேண்டாமென நினைக்கலாம். சிலர் தங்கள் படத்தை வெளியிட அனுமதி தராமல் இருக்கலாம். பல காரணங்கள்.

தனிப்பட்ட முறையில் அணுகிப் பார்த்தால், இப்படம் அபுல் கலாம் ஆசாத்தின் இண்டியா வின்ஸ் ஃப்ரீடமில் இருக்கும் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின் நிழற்படத்தின் அளவிற்கு முதன்மையானது அன்று. ஆனால், தமிழக எல்லைக்குள் தலைவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், அதாவது, சின்னச்சின்ன வெற்றிகளுக்கும் பதவிகளுக்கும் முக்கியத்துவம் தந்து நாடாளாவிய வெற்றியைப் போல், உலகளாவிய பதவியைப்போல் நினைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள தொண்டர்களால் தங்கள் அபிமானங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் தமிழகத்தில், இந்த நிழற்படம் வரலாற்றுத் தொடர்புடையது என்றும் சொல்லலாம். அந்தப் படம் எடுக்கப்பட்ட நிகழ்வு, அரசியல் தொடர்பான விழாவாக இல்லாமல் திரைப்படம் தொடர்பான விழாவாகவே இருந்தபோதிலும், அதனை வரலாற்றுத் தொடர்பான நிழற்படம் எனலாம்.

துப்பறியும் தொடர்களில் வ்ருவதைப்போல முதலில் ஒருபாதி படத்தையும் இரண்டாவது மறுபாதி படத்தையும் பார்த்து, முதல் முறை பார்க்கும்போது இருந்த புரிதல் வேறாகவும் இரண்டாவது பார்க்கும்போது கிடைத்த புரிதல் வேறாகவும், ஆச்சரியத்தை உண்டாக்கிய நிழற்படம் அது. இன்னும் சில வருடங்கள் கழித்து வேறு ஏதோ ஒரு பத்திரிகை அந்தப் பக்கமாக முரசொலி மாறனும் நிற்கும் இதே படத்தின் அடுத்த வர்ஷனை வெளியிட்டாலும் வெளியிடலாம்.


இரண்டாவது ஆச்சரியம்:
கலைஞருக்கே ஒரு நிகழ்வு நினைவில் இல்லையா?

ஏ.எல்.எஸ், சிவாஜி, கலைஞர், புரட்சித் தலைவர், அம்மையார் என ஐவர் நிற்கும் இப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்னர் படிக்கையில், அது ‘எங்கள் தங்கம்’ படத்தின் விழாவில் எடுக்கப்பட்டதாக குறிப்பு படித்த நினைவு. ஆனால், கலைஞரே அதனை சந்தேகமாகச் சொல்லியிருக்கிறார். தான் முதல்வராக இருக்கும்போது எடுக்கப்பட்ட படம் என்ற அளவில்தான் கலைஞர் அந்தப் படம் குறித்து சொல்லியிருக்கிறார். எங்கள் தங்கம் படத்தின் வெற்றி விழா கிடையாது என்று முடிவாகச் சொல்லியிருக்கிறார். வெற்றிவிழாவுக்கு சிவாஜி வந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார். ஒருவேளை எங்கள் தங்கத்தின் துவக்க விழாவாக இருக்கலாம் என்று சந்தேகமாகவே சொல்லியிருக்கிறார்.

இப்பொழுது அந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று சொல்லக்கூடியவர்களுள் முதன்மையானவர் அம்மையார்தான். அம்மையாரின் தற்போதைய அணுகுமுறையில் அதற்கான விடையை அவர் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகளே கிடையாது. மற்றவர்கள், திரைப்பிரபலங்கள், எங்கள் தங்கம் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றவர்கள் (உதாரணமாக கவிஞர் வாலி), திரை ஆய்வாளர்கள், அரசியல் பிரபலங்கள் என யாரேனும் இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று சொல்வார்களா?

Comments

Anonymous said…
அந்த படத்தை ஸ்கேன் பண்ணி போடலாங்களே??

ப்ளீஸ்..

முதல் முறை படம் பேரை "எங்கள் தங்கள்"னு எழுதி இருக்கீங்க.. :)

அன்புடன்,
சுபைர்
nice blog

visit my blog

tamil web library

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...