ஹராமி - பாஸ்டர்ட் - முறைதவறிப் பிறந்தவன்/ள், இதற்கான சரியான தமிழ்ச் சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். மரியம் முறைதவறிப் பிறந்தவள். பீங்கான் குவளையைக் கைதவறவிட்டபோதுதான் முதன் முதலாக தனது அம்மாவே தன்னை அப்படி அழைப்பதைக் கேட்கிறாள் மரியம். "ஹராமீ!" அப்போது அவளுக்கு வயது ஐந்து. அங்கிருந்து துவங்குகிறது அவள் கதை.
சோவியத்தின் ஆக்கிரமிப்பு, தாலிபான் கட்டு என ஆப்கானின் வரலாறு மட்டும் இந்நாவலுடன் சொல்லப்பட்டிருக்கவில்லையென்றால் ஒருவேளை பெண்ணின் பெருமை பேசும் இன்னொரு புத்தகம் இது என ஒதுக்கியிருக்கலாம்.
இந்நாவலின் மையமாக இருக்கும் மரியத்தின் வாழ்க்கை மட்டும் தினசரி நாம் கேள்விப்படும் பிரச்சனையாக இருந்திருக்குமேயானால் ஏதோ ஒருதொலைக்காட்சித் தொடருக்கான கதை என்று ஒதுக்கியிருக்கலாம்.
இவை இரண்டும் இல்லாமல் பிறப்பு முதல் ஏளனத்தையும் ஏமாற்றத்தையுமன்றி வேறெதையும் சந்திக்காத பெண்ணின் வாழ்வில் சோவியத் ஆக்கிரமிப்பும் தாலிபானிய கட்டுப்பாடும் கைகோத்துக்கொண்டு இன்னமும் விதியின் விளையாட்டை குரூரமாக்கிய கதை. தனது பிறப்பும் விதியும் தன்னுடன் விளையாடியதால் அவள் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் துயரத்தையே சந்திக்கிறாள். ஒவ்வொன்றாக ஏமாற்றங்கள் தன்னை ஆட்கொண்டபோதிலும் எங்கும் மனம் தளராமல் வாழ்க்கையை ஓட்டுகிறாள். நாவலில் ஆப்கானின் வரலாறும், பஷ்தூனிய வாழ்க்கை முறையும் வாசகனை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும்.
குல் தாமன் என்னும் கற்பனை கிராமத்திலிருந்து ஹெராத் வழியாக காபூல் நகரம் வரையில் வாழ்க்கை கிழித்த கோட்டில் வாழ்ந்த மரியத்திற்காக வாசகரை ஒரு பெருமூச்சாவது இது விடச்செய்யும் என நினைக்கிறேன்.
எ தௌசண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ் - ஆயிரம் அழகுச் சூரியன்கள், இது என்ன வாசகம் என்ற தேடலை வாசகனுக்குக் கொடுக்காமல் அது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாயப்-யே-தப்ரீஸி என்னும் பாரசீகக் கவிஞனின் கவிதை வரியின் மொழிமாற்றம் என பின்னுரையில் காலித் ஹொசைனி சொல்லிவிடுகிறார். ஏறக்குறைய பாரசீக மூலத்தை ஒட்டிருக்கும் மொழிமாற்றமாக பலரால் ஒப்புக்கொள்ளப்பட்ட வாசகம் என்றும் குறிப்பிடுகின்றார். ஆப்கானிய வரலாற்று நிகழ்வுகளை கதையுடன் அமைக்கும் ஹொசைனியின் உத்தி கைட் ரன்னரைப் போலவே இதிலும் புத்தகமெங்கும் பரவிக் கிடக்கிறது, எனது பார்வையில், அதுவும் ஈர்ப்பை உண்டாக்கி விறுவிறுப்பாக நாவலை நகர்த்துகிறது.
ஹெராத் நகரின் பணக்காரர்களுள் ஒருவரான ஜலீலுக்கு அதிகாரபூர்வமாக மூன்று மனைவியர்கள். நான்காவதாக அவருக்கு வேலைக்காரி நானாவுடன் தொடர்பு உண்டாகின்றது. ஹெராத்தின் அருகிலிருக்கும் குல் தாமனுக்கு நானா குடியேற்றப்படுகிறாள். அவளுக்காக ஒரு குடிலை உண்டாகுகின்றார்கள். மாதாமாதம் மளிகைப் பொருள்கள் குடிலுக்கு வந்து சேர்கின்றன, ஜலீலும் வருகின்றார். ஜலீலின் வருகையும் அன்பும் மட்டுமே மரியத்தின் மகிழ்ச்சிக் கணமாக இருக்கின்றது. ஏமாற்றத்தைச் சந்தித்த மரியத்தின் தாய் நானா, ஜலீல் இல்லாத நேரங்களில் ஜலீல் குறித்து எந்தவிதமான நல்ல வார்த்தைகளையும் பேசி மரியம் கேட்கவில்லை.
ஒருநாள் ஜலீல் வராதபோது மரியம் குல் தாமனின் எல்லையைக் கடந்து ஹெராத்துக்கு நடந்தே செல்கிறாள். ஆப்கானியப் பிடிவாதம் அவளை அப்படி நகர்த்துகிறது. ஹெராத்தில் ஜலீலை அறியாதோர் யாரும் இல்லை. ஜலீலின் வீட்டிற்கு வழி கேட்டு அந்தப் பெரிய மாளிகையை அடைகின்றாள். அவளை அறிந்த ஓட்டுனர் ஜலீல் இல்லையெனவும் கிராமத்திற்குத் திரும்பிவிடும்படியும் வற்புறுத்துகிறார், இவள் பிடிவாதம் பிடிக்கிறாள். மிகுந்த் சிரமத்துடன் மரியத்தை கிராமத்துக்கு திருப்பி அனுப்புகிறார்கள். மரியம் ஹெராத்துக்குச் சென்றதை அறிந்த நானா தற்கொலை செய்துகொள்கிறாள். அப்போது மரியதிற்கு வயது பதினைந்து.
மரியம் ஹெராத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அவளை விட்டில் வைத்திருப்பது கௌரவக் குறைவென்று எண்ணி ஜலீலின் மனைவியர் அவளுக்கு மணமுடிக்கின்றார்கள். ஜலீலால் ஏதும் செய்ய இயலவில்லை. பொருத்தமில்லாமல் அதிக வயதுக்காரன் ரஷீதுடன் மரியத்தின் திருமணம் நடக்கிறது. ரஷீத் காபூல் நகரில் ஓரளவிற்கு வசதியானவன். செருப்பு தைப்பது அவனது தொழில். குல் தாமன் கிராமம், ஹெராத் நகரம் என்று சுற்றிக்கொண்டிருந்த மரியத்தின் வாழ்க்கை காபூலை நோக்கி நகர்கிறது. வாழ்க்கையில் முதன்முறையாக மரியத்திற்கு புர்கா அணியவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தன்னிடம் காலைக் காட்டி செருப்பு தைக்க அளவெடுத்துக்கொள்ளும் ஆப்கானியப் பெண்களைக் குறைகூறும் கணவன் தருகின்ற புர்க்காவை அணிய மறுப்பதற்கு வாய்ப்பில்லை. மரியம் கருத்தரிக்கிறாள், கரு கலைந்துவிடுகின்றது, ரஷீதுக்கு மரியத்தின் மீதிருந்த பிடிப்பு விலகி வெறுக்கத் துவங்குகிறான். காலம் நகர்கிறது. சோவியத் படைகள் ஆப்கானிலிருந்து விலக்கப்படுகின்றன. தாலிபானின் கை ஓங்குமோ என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மரியம் ஜலீலை மறக்கிறாள், ஹெராத்தை மறக்கிறாள், குல் தாமனை மறக்கிறாள், இயந்திரமாக வாழக் கற்றுக்கொள்கிறாள்.
காபூலில் இன்னும் இரண்டு குடும்பங்கள் வாசகனுக்கு அறிமுகமாகின்றன. ஒரு குடும்பத்தில் சோவியத்திற்கு எதிராக ஜிஹாத்தில் ஈடுபட்டு உயிரிழந்த இரண்டு சகோதரர்கள் அறிமுகமாகின்றார்கள். அவர்களுடைய தங்கை லைலா அறிமுகமாகின்றாள். அவள்தான் கதையின் இன்னொரு அங்கம். இன்னொரு குடும்பத்தில் கண்ணிவெடியில் தன் ஒரு காலை இழந்த 'தாரிக்'கின் குடும்பம் அறிமுகமாகின்றது. தாரிக்கும் லைலாவும் பால்ய வயதிலிருந்தே ஒன்றாக வளர்கிறார்கள். அவர்கள் பள்ளிக்குழந்தைகளாக இருக்கையில்தான் மரியம் திருமணமாகி காபூலுக்கு வருகிறாள். பருவம் செல்லச் செல்ல தாரிக்கிற்கும் லைலாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. சோவியத் படைகள் திரும்பிச்செல்ல ஆப்கானில் புரட்சி வெடிக்கிறது. காபூலை ஆக்கிரமிக்கும் முஸ்தீபுகளை தாலிபான் மேற்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் குண்டு மழைக்குள் மக்கள் அஞ்சிக்கொண்டே வாழ்கிறார்கள். ஒவ்வொருவராக நகரை விட்டு வெளியேறுகிறார்கள்.
தாரிக்கின் குடும்பம் காபூலை விட்டு வெளியேறுகின்றது. அந்த மோசமான பொழுதில் லைலா தாரிக்கிடம் தன்னை இழக்கிறாள்.
ஜிஹாதில் மக்ன்களைப் பறிகொடுத்து வாழ்வில் பிடிப்பே இல்லாமல் நான் காபூலை விட்டு நகரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த தாயார் திடீரென்று ஒருநாள் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துவிட சம்மதிக்கிறாள். புறப்படும் சமயத்தில் அவர்கள் வீட்டில் குண்டு விழ எல்லாரும் கொல்லப்படுகின்றார்கள், லைலா மட்டுமே ஏகப்பட்ட காயத்துடன் பிழைத்துக்கொள்கிறாள். காப்பாற்றப்பட்ட லைலா ரஷீத் - மரியத்தின் பாதுகாப்பில் இருக்கிறாள். மெதுவாக உடல்நலம் தேறுகிறது. லைலாவின் இருப்பு ரஷீதை உறுத்துகிறது. வயதுவந்த பெண் வீட்டில் இருக்கவேண்டாம். ஊரார் ஏதாவது சொல்வார்கள் என்று பேச்சைத் துவங்குகிறான். தாலிபான்களின் தாக்குதல் அதிகமாகி காபூல் மெதுவாக வீழ்கிறது.
லைலாவுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ரஷீதின் வீட்டிலிருந்து வெளியேறி எங்கும் தங்குமிடம் இல்லாமல் அகதி முகாமில் இருப்பது, இல்லையென்றால் கட்டாயத்தின் பேரில் ரஷீதை மணந்துகொள்வது. லைலாவின் வயிற்றில் வளர்ந்து வரும் தாரிக்கின் கருவும் தாரிக் இறந்துவிட்ட செய்தியும் லைலாவை மணவாழ்க்கைக்கு கட்டாயப்படுத்துகின்றது. லைலா ரஷீதை மணந்துகொள்ள சம்மதிக்கிறாள். அதுவரையில் அபலையாக லைலாவைப் பார்த்த மரியம் அன்று முதல் லைலாவை எதிர்யாகப் பார்க்கிறாள். கிட்டத்தட்ட தாயின் வயதையொத்த மரியத்துக்கும், மகளின் வயதையொத்த லைலாவுக்கும் அடிக்கடி சச்சரவுகள் உண்டாகின்றன. புதுமனைவியின் வரவால் ரஷீத் லைலாவை வேலைக்காரியாக நடத்தத் துவங்குகிறான். ரஷீதின் மனைவியாக, லைலா, தாரிக்கின் பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ரஷீதிற்கு லைலாவின்மீதும் மெள்ளமெள்ள வெறுப்பு உண்டாகின்றது. காபூல் முற்றிலுமாக தாலிபானின் பிடியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் அமலாவதைக் காண்கிறது.
லைலாவின் குழந்தையிடம் மரியம் மிகவும் பாசமாக இருக்கிறாள். இந்தப் பாசம் லைலாவையும் மரியத்தையும் இணைக்கிறது. இருவரும் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ரஷீதிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார்கள். பெண்கள் தனியாகப் பயணம் செய்யக்கூடாது என்னும் தாலிபானின் கட்டுப்பாட்டால் மீண்டும் ரஷீதிடமே வந்துசேர்ந்து இயந்திரத்தனமாக வாழப் பழகிக்கொள்கிறார்கள். லைலாவுக்கும் ரஷீதுக்கும் ஆண்குழந்தை ஒன்று பிறக்கிறது. மரியம் நாற்பதைக் கடக்கிறாள்.
இறந்ததாக சொல்லப்பட்ட தாரிக் லைலாவைச் சந்திக்க வருகின்றான். லைலாவை மணப்பதற்காக ரஷீத்தான் தாரிக் இறந்ததாகப் பொய் சொல்லிய உண்மை தெரியவருகின்றது. லைலா உண்மை தெரிந்து ரஷீதிடம் வெடிக்கிறாள், 'எனக்கும் உன்னைப் பற்றிய உண்மை தெரியும்' என்று ரஷீதும் லைலா மீது பாய்கிறான்.
அப்பொழுதுதான் அது நிகழ்கிறது. அடங்கிக் கிடந்த மரியம் வெடித்துக் குமுறுவதும் லைலாவிற்கு ரஷீதிடமிருந்து விடுதலை கிடைப்பதும் ஒன்றாக நிகழ்கின்றன. தாலிபானிய கட்டுப்பாடுகள் காபூலை இறுக்குகின்றன.
அதற்கப்புறம் நிகழ்பவை அனைத்தும் மனதில் கனத்தை ஏற்றிச் செல்பவை.
குல் தாமனை நோக்கிய லைலாவின் பயணமும் அங்கே அவளுக்குக் கிடைக்கும் மரியத்துக்கான ஜலீலின் கடிதமும் காலித் ஹொசைனியின் எழுத்தின் மீதான மதிப்பை உயர்த்துகின்றன. கிட்டத்தட்ட தேவதைக் கதைகளின் மகிழ்ச்சிகரமான சம்பிரதாய முடிவையே நாவல் கொண்டிருந்தாலும், முடிவுக்கு முன்னே நிகழும் நிகழ்வுகள் கொஞ்சம் உலுக்கித்தான் போடுகின்றன.
பஷ்தூனியர்களுடன் எனக்கு ஓரளவுக்கு பழக்கம் உண்டு. ஜின்னா எதிர்ப்பு, பஞ்சாப் எதிர்ப்பு, உருது எதிர்ப்பு, பங்களாதேஷ் ஆதரவு என்று வகைக்கொரு கொள்கையைக் கொண்டிருக்கும் பத்தான்களுடன் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறேன். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் தேநீர் இல்லாமல் முடிக்காத அவர்களது கலாசாரம் எனக்கு அறிமுகமானதுதான். பத்தான்களுடன் பயணம் செய்திருக்கிறேன். பத்தான் குடும்பத்துப் பெண்களுடன் எனது துணைவியாரும் பழகியிருக்கிறார். சவூதியிலிருந்து விடுமுறையில் புறப்படும்பொழுது 'யே மேரி பாபிகேலியே' என்று துணிமணிகளைப் பரிசாகத் தரும் பத்தானிய நண்பர் ஒருவர் எனக்குண்டு. பத்தான் குழந்தைகளுடன் எனது குழந்தைகள் விளையாடியிருக்கிறார்கள். இந்தப் பழக்கவழக்கத்தாலோ என்னவோ பஷ்தூனிய கதைக்களம் என்னை வெகுவாக ஈர்க்கிறது.
தாலிபானின் ஆக்கிரமிப்பில் காபூல் நகரில் மக்கள் தொலைக்காட்சிப் பெட்டியை உறையிட்டுப் புதைத்து வைப்பதும், இரவு நேரங்களில் வெளியில் எடுத்து படம் பார்ப்பதும் சித்தரிக்கப்படும்போது வியக்காமல் இருக்க இயலவில்லை. அத்தனை சட்டதிட்டங்கள் இருந்தும் கள்ளச் சந்தையில் டைட்டானிக் ஒளிநாடா கிடைப்பதும், கடைகளிலெல்லாம் டைட்டானிக் பெயரில் பொருள்கள் விற்கப்படுவதும் புன்சிரிப்பை வரவைக்கின்றன. சோவியத்திற்கு முந்தைய ஆப்கானில் திரையிடப்படும் இந்தியத் திரைப்படங்களில் காதலர்களின் நாடகத்தன்மையான பிரிவு/சேர்க்கைகளை எள்ளி நகையாடுவதும் ஊடே நிகழ்கிறது. அது மட்டுமல்லாமல் மோசமான முறையில் மொழிமாற்றம் செய்யப்படும் பார்சி திரைப்பட வசனங்களும் சிரிப்பு உண்டாக்குன்றன. பிராந்திய மொழியில் மாற்றம் செய்யும்போது உணர்ச்சிகரமான வசனங்களும் கேலிக்கிடமாவது நமது மொழிமாற்றத்தில் மட்டுமல்ல ஆப்கானிலும் நிகழ்கிறது என்பதால் உண்டாகும் சிரிப்பு அது.
மரணதண்டனைத் தீர்ப்பளிக்கும் தாலிபான் நீதிபதி, 'உனது நிலை எனக்குப் புரிகிறது சகோதரி, ஆனால், நாளைக்கு இறைவன் என்னைக் கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது' என்று கேட்கும் காட்சியை எப்படி விளங்கிக்கொள்வதென்றே புரியவில்லை. தாலிபானின் தீவிர இறையச்சமா? அதிகாரத் தன்மையா? குற்றத்திற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும்படி இறைவன் சொல்லியிருப்பதை ஏன் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
வகுப்பறையில் கம்யூனிசம்தான் ஆப்கானை உய்விக்கும் என்று மானவர்களின் மனதில் சித்தாந்தத்தை விதைக்கும் ஆசிரியை, ஜிஹாதில் மகன்களைப் பறிகொடுத்துவிட்டு தாலிபான் காபூலுக்கு வந்தால் அவர்களை மலர் தூவி வரவேற்பேன் என்று முழக்கமிடும் தாய், சுதந்திரமாக பள்ளிக்கு சென்றுவந்து தாலிபான் ஆக்கிரமிப்பால் வீட்டில் முடங்கும் பெண் குழந்தை, புர்க்கா அணிந்து கொண்டுதான் எங்களை மகப்பேறு பார்க்கச் சொல்கிறார்கள் என்று வருத்தப்படும் மகப்பேறு மருத்துவர், பெண்குழந்தைகள் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் குல் தாமன் கிராமத்து மதப் பெரியவர், தனியாக பெண்களை பயணம் செய்ய அனுமதிக்காமல் குறுக்கு விசாரணை நடத்தும் தாலிபான் அதிகாரி, மரணதண்டனைக்கு கலாஷ்னிகாவை நீட்டும் தாலிபான் சிப்பாய், வேலையை இழந்து ரொட்டிக் கடையில் வேலை செய்யும் ஆசிரியர், வானொலியை மட்டுமே செய்திக்கு நம்பி முஜிபுல்லாவின் வீழ்ச்சி, தாலிபானின் வெற்றி - வீழ்ச்சி எல்லாவற்றையும் கேட்கும் செருப்பு தைப்பவன்.
'ஹெராத் நகரில் காலை நீட்டினாலும் யாராவது கவிஞனின் குறுக்கில்தான் கால் இடிக்கும்' என்று ஹெராத்தின் புகழ் பாடும் வியாபாரி, தனது கணவனுக்கு முறைதவறிப் பிறந்த பெண்ணுக்கு அவரசாவசரமாக மணமுடித்துத் தள்ளும் பணக்காரி, முதலாளியின் பெயர் கெட்டுவிடாமல் அவர் மகளை மரியாதையாக நடத்தி கிராமத்துக்கு திருப்பியனுப்பும் வேலைக்காரன், காதலன் இறந்துவிட்டதாக வந்து பொய்சொல்லும் காவலாளி...இப்படியாக கதை முழுதும் பாத்திரங்கள் வந்து நினைவில் நின்றாலும், அதன் போக்கில் வாழ்வை வாழும் கதாபாத்திரம் மரியம் எனக்கு நா.பா.வின் மணிபல்லவம் நாவலின் முல்லை என்னும் கதாபாத்திரத்தை நினைவுகூர்கிறது, அதாவது, இன்றைக்கும் மணிபல்லவம் கிடைத்தால் அந்தக் கடைசி அத்தியாயமான ஆறாத நெருப்பைப் படித்துப் பார்த்து சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்வதைப் போல 'எ தௌசண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ்'ஸிலும் மரியம் விடைபெறும் கடைசி அத்தியாயத்தைத் திரும்பப் படித்து சிந்தையில் ஆழ்ந்துவிட எண்ணம் மேலிடுகிறது.
லைலாவின் குழந்தையின்பால் மெதுவாக மரியம் ஈர்க்கப்படும் காட்சியமைப்பை ரசித்துப் படித்தேன். நானும் சராசரி தகப்பன்தான். மழலையின் பிஞ்சுக்கரங்களின் பிடி என்னையும் இறுக்கியிருக்கிறது. அதிவிற்பனைகளைப் படிப்பதில் ஆர்வமிருப்போர்க்கு இந்நாவலைப் பரிந்துரைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
மரியத்திற்காக...
பெண்ணாய்ப் பிறந்தும் பெறவில்லை பேருவகை
சொன்னாற் சிலிர்க்கின்ற சொற்றொடருள் - அந்நாளில்
காக்கின்ற தாயானாள் கர்ப்பந் தரிக்காமல்
நோக்கியே நின்றாள் நிதம்!

Comments
ஆயிரம் அழகுச் சூரியன்கள்...---
நூறு கோடிப் பெண்கள் உண்டு உன் போல் யாருமில்லையே...---
இது மரியத்துக்கும் பொருந்தும்.[நடுவில் துணைவியாருக்கும் ஐஸ் வைத்தது போல் இருந்துது] சினிமாவை விட புத்தக விமர்சனம் மிக அழகாக உங்களுக்குக் கூடி வருகிறது. இன்னும் அதிகப் புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அரிய முயற்சி ஆசாத் ஜி
to me the the book "water" and it women came to my mind while reading.
yours is a very crisp summary, good to read
Chandra
நன்றிகள்.