Skip to main content

Posts

எனது பள்ளிக்கூடம் - சொந்தக் கதை

விடுமுறையில் நண்பரைச் சந்தித்தபோது சாப்பிடுவதற்கு எங்கு போகலாம் என்னும் பேச்சு வந்தது, க்ரீம்ஸ் சாலை அலி டவர்ஸ் எதிரிலுள்ள பிரியாணிக் கடை, பீட்டர்ஸ் சாலை சரவணா, ஜெமினி பாலிமார், ஜாம்பஜார் சாகர், ரத்னா கபே, இப்படியாக ஒவ்வொன்றாக யோசித்து தட்டிக் கழித்து வண்டியை வளைத்து வளைத்து கடைசியில் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் தெருவிற்கு வந்தாகிவிட்டது. வந்தது வந்தோம் கெல்லெட் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேனிலைப் பள்ளி), நாம் படித்த பள்ளியைப் பார்த்துவிட்டு அருகில் இருந்த சங்கீதாவிலேயே சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் மணீஸ் பிரப்பரேடரி ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் சேருவது அந்தக் காலத்தில் (1971) இலகுவான காரியம். ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் கோடை விடுமுறையில் ஆறாம் வகுப்பின் நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்திவிடுவார்கள். 'ஆஸ் ஐயாம் சஃபரிங் பிரம்' மில் ஆரம்பித்து ஏதாவது கட்டுரை வரையில் பயிற்சிகள் இருக்கும். திருவல்லிக்கேணியில் வாழ்ந்த கீழ்நடுத்தர வகுப்பிற்கு அந்நேரத்தில் சி.ஏ.அப்துல் ஹக்கீம் முஸ்லிம் உயர்நிலைப்...

ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார், ஆஸ்கார் - சில கோவையற்ற எண்ணங்கள்

ஏ.ஆர்.ரஹ்மானோ, இளையராஜாவோ வடக்கிற்கு இசையமைக்கையில் பாடலாசிரியர்களை யார் தேர்வு செய்வார்கள் என்னும் கேள்வி எனக்குத் தேவையற்றது. ஆனால், எந்தப் பாடலாசிரியர் எழுதினாலும் திரைக்கதையின் தன்மைக்கு ஏற்றவாறு பாடலாசிரியர்கள் எழுதுகின்ற பாடல் மொழியும் அமைந்திருப்பதில் அந்தப் படத்தின் இயக்குநரின் பங்கு இருக்கும் என்பதை ஊகிக்கலாம். காட்டாக, லகான் திரைப்படத்திற்கு பாடல்களை ஜாவீத் அக்தர் எழுதியிருந்தார். அதில் எல்லா பாடல்களிலும் ஒலித்த மண்ணின் மணம், மிகக் குறிப்பாக கிருஷ்ணலீலா பாடலான 'ராதா கைஸே நா ஜலே' பாடலில் 'கோபியான் ஆனி ஜானி ஹை ராதா தோ மன் கி ரானி ஹை' வரிகளில் வீசிய வடக்கத்தி வாசத்தை ரசித்தேன். நமது திரைக்கவிஞர்களும் தேவைப்படும் நேரத்தில் இப்படி வட்டார வழக்கை உள்ளே கொண்டுவரத் தயங்குவதில்லை என்பது ஒருபக்கப் பார்வையாக இருப்பினும், அதாவது, தேவைப்பட்டால் 'எங்க ஏரியா உள்ள வராதே' வைப் போல சென்னைத் தமிழை நா.முத்துக்குமாரால் தமிழ்த் திரைக்குத் தர இயலும். ஆனால், கொஞ்சம் கிராமியமாக நமது திரைப் பின்னணிகள் விரியும்போது அந்தந்த வட்டார வழக்கில் பாடல்கள் தரப்படுகின்றனவா என்பதையும் சிறி...

நான் கடவுள் - எனது பார்வையில்

அதிகமான எதிர்பார்ப்புகளின் காரணமாக அளவுகோலை உயர்த்திப் பிடித்துக்கொண்டு படத்தை எடைபோடும் வகையானதுதான் எனது பார்வை. மையக்கருத்து எனக்குப் புரியவில்லை என்பதாகத்தான் முதலில் படத்தை அணுகினேன். அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அத்வைதிகளின் கருத்துதானா என்பது நேற்றைய மாலை வரையில் தெரியாமலே இருந்தது. ஜெயமோகன் அய்யாவின் வலைப்பதிவில் இதன் பொருளைத் தெளிவாக எழுதியிருந்தார், 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்பதன் பொருள் 'நான் கடவுள்' அல்லது 'நானே கடவுள்' . இரண்டும் ஒன்றுபோலத் தோன்றினாலும் அடிப்படையில் வேறுபட்டவை. கூகிள் தேடலின் உதவியால் அகத்தியர் குழும மடல்களிலிருந்து அஹம் ப்ரமாஸ்மி என்னும் வாசகம் அத்வைதக் கொள்கையைச் சேர்ந்தது என்னும் ஒரு பார்வை கிடைக்கப் பெற்றேன். அந்தப் பார்வையுடனும் கதையின் மையக் கருத்தைப் பொருத்திப் பார்த்தேன். அந்தக் கோணத்தில் கதையின் மையக் கருத்து அத்வைதக் கொள்கையுடன் சேரவில்லை. நாயகன் தன்னைத்தான் கடவுளாக எண்ணிக்கொள்கின்றானேயன்றி தன்னெதிரில் இருக்கும் மானுடர்களில் அவன் கடவுளைக் காணவில்லை, தன் தாய் உட்பட. இயக்குநர் பாலா அவர்களும் ஜெயமோகன் அய்யா அவர்களும் படத்தின் பெயருடன்...

மேடைப்பேச்சும் சில பகிர்தல்களும்

முதலில் ஆசிப் அழைத்தபோது மறுத்தேன். 'பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா?' என்றபோது இப்போதைக்கு அதிலெல்லாம் ஆர்வமற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லி 'வேண்டாமே' என்றேன், பிறகு இரண்டொரு நாள் கழித்து பேசினால் என்னவென்று தோன்றியது, 'சரி நான் பேசுகிறேன், நீங்களும் பேசுங்கள்' என்றேன். அவர் பேச இயலாதென்றும் என்னை மட்டும் பேசுமாறும் பணித்தார். 'திரைப்படங்கள் படமா? பாடமா?' என்னும் வாதாடுகளத்தில் பாடங்களே என்று வாதாடினேன். தீர்ப்பென்னவோ படங்கள் படங்கள்தான் என்று கிடைத்தது. தோற்ற அணிக்குத் தலைவனாக இருந்ததில் வருத்தம் ஏதுமில்லை, சல்தாஹை! அன்றைய பேச்சிலிருந்து ஒன்றைப் புரிந்துகொண்டேன். பார்வையாளர்களை பிரமிக்க வைத்து அந்த பிரமிப்பில் பேச்சை நகர்த்திச் செல்லும் உத்தி இன்னமும் காலாவதியாகவில்லை. பேச்சைத் துவங்கியதும் அதிகமாக புழக்கத்திலில்லாத விருத்தங்கள், திருப்புகழ், சித்தர் பாடல்கள் இவற்றிலிருந்து குறிப்புகள் எதுவுமில்லாமல் மனப்பாடமாக வரிகளைச் சொல்லிக்காட்டி அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக பேச்சை நகர்த்துவதை பெருவாரியான மக்கள் விரும்புகின்றார்கள். மேடைப்பேச...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...

கஜினி (இந்தி)

ரியாஸ்கான் தனது பெயரை ரியாஸ் என்று மாற்றிக்கொண்டாரா? இந்தி கஜினியில் அவரது பெயரை கான் இல்லாமல் வெறுமனே ரியாஸ் என்றுதான் காட்டுகிறார்கள். ஆனால், ஐ.எம்.டி.பி.யில் ரியாஸ் கான் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். ஆமீர் கான் - ரியாஸ் கான் என்று வந்தால் நன்றாக இருக்காதென மாற்றினார்களா என்பது தெரியவில்லை. ரியாஸும் ஆமீரும் போட்டுக்கொள்ளும் சண்டைக்காட்சி முழுதையும் கொஞ்சமேயான பாஸ்ட்ஃபார்வேர்டில் எடுத்திருக்கிறார்கள். அதனாலெல்லாம் ஏதோ பயங்கரமான வேகமோ, சண்டைக்காட்சிகளை விறிவிறுப்பாக்கிக் காட்டுவதோ திரையில் நிகழவில்லை. நீளமாக இல்லாமற்போனதற்காக சண்டைக்காட்சிப் பிரியர்கள் அல்லாதவர்களை மகிழ்வித்ததன்றி வேறெதையும் இந்த பாஸ்ட்ஃபார்வேட் உத்தி செய்துகாட்டியதாக எனக்குப் புலப்படவில்லை. நம்மவர்கள் பீட்டர் ஹெய்னும், ஸ்டண்ட் சிவா(வேட்டையாடு விளையாடு)வும்தான் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வழமைபோலவே எனக்குக் குழப்பமாக இருக்கிறது ஹெய்ன் அமைத்த காட்சிகள் எவையெவை, சிவா அமைத்த காட்சிகள் எவையெவை என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை. மும்பை குறுக்குச் சந்துகளில் நிகழும் சண்டைக்காட்சிகளில் ஹெய்ன் கொஞ்சம் தெரிகிறார் என்...

கினோகுனியா புத்தகக்கடை

டிசம்பர் முதல் வாரத்தில், காலையில் துபாய் மாலில் கூட்டம் சேருவதற்கு முன்னரே சென்று சேர்ந்தேன். முன்னமேயே கேள்விப்பட்டதால் நண்பன் சொல்லிவிட்டதால் கடையின் பிரம்மாண்டம் வியப்பில் ஆழ்த்தவில்லை. கடையின் பரப்பளவு மொத்தம் 68850 சதுர மீட்டர்கள் என்கிறார்கள் (நமது கணக்கில் சொல்வதென்றால் 308 கிரவுண்டில் ஒரு புத்தகக்கடை). உள்ளே நுழைந்ததும் பெரிய்ய்ய 'த எர்த்' புத்தகம் வரவேற்கிறது. மொத்தமே 2000 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருப்பதான அறிவிப்பைச் சுமந்து நிற்கும் பெரிய புத்தகம். அட்டையைத் திருப்ப இரண்டு முட்டை குடித்துவிட்டு வரவேண்டும் போன்றதான கனமாக இருக்கிறது. யாரோ ஒரு மலையாளக்கரையோரச் சேச்சி கேரளாவை அதில் பார்த்தால்தான் ஆயிற்று என அடம்பிடித்து விடாப்பிடியாக புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு நகராமல் இருந்தார், வேலைக்காகாது என நான் எனது சுற்றுலாவைத் துவங்கினேன். வழமையான அதிவிற்பனை அடுக்குகளில் துபாயின் புத்தகக்கடைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் காலித் ஹொஸைனியின் கைட் ரன்னரும், எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸும் இங்கேயும் இருந்தன. ராமச்சந்திர குஹாவின் இண்டியா ஆஃப்டர் காந்தியும் இருந்தது. வளைகு...