Skip to main content

Posts

ஈகைப்பெருநாள்

போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி ஈத்காவிலும் (பெருநாள் தொழுகை நடக்கும் மைதானம்) கூட்டம் நிரம்பி வழிந்தது. பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் இதே ஈத்காவிற்குச் சென்றபோது இத்தனை கூட்டம் கிடையாது என்று சொல்வதெல்லாம் வழமையாகிப் பொரித்தெடுப்பதால் அதனை மீண்டும் மீண்டும் சொல்லி 'அந்தக்காலத்துல' பாணியில் நினைவோடையில் நீந்த விருப்பமில்லை. இன்று நாங்கள் சென்றது துபாயின் தேரா பகுதியில் இருக்கும் ஈத்கா மைதானம். கராமாவில் இன்னொரு மைதானம் இருக்கிறது. அங்கே ஷேக் குடும்பத்தினர் வருவார்கள். துபாயின் ஆட்சியாளர் ஷேக் மொஹம்மதும் அங்கே வருவார் என்பார்கள். தொண்ணூறுகளில் ஒருமுறை நாங்கள் கராமா ஈத்காவிற்குச் சென்றிருந்தபோது ஷேக் மொஹம்மத் வந்திருந்தார், ஆனால், அப்போது அவர் துபாயை ஆட்சி செய்துகொண்டிருக்கவில்லை, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்ததாக நினைவு. இன்றைக்கு காலை ஆறு இருபதுக்கு ஈத்காவை அடைந்தபோது மைதானத்தைத் தாண்டி சாலையில்தான் இடம் கிடைத்தது. மைதானத்திற்குள் செல்லவேண்டுமென்றால் அதிகாலைத் தொழுகை முடிந்தவுடன் அங்கே இருக்கவேண்டும் என நண்பர் நேற்றிரவே பேசிக்கொண்டிருந்தார்கள். வழமைபோல் தொழுகை முடிந்ததும் ...

பாடகர் மகேந்திர கபூர் மரணமடைந்தார்

இந்திப் பாடல்களைக் கேட்டிராமல் தமிழ்த் திரைப் பாடல்களை மட்டுமே கேட்பவருக்கும் மகேந்திர கபூரை அறிமுகப்படுத்துவது எளிது. நீயா திரைப்படத்தின் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா' பாடலின் இந்தி வடிவத்தைப் பாடியவர் மகேந்திர கபூர். இது ஒரு எளிய அறிமுகத்திற்காகவேயன்றி நாட்டுப்பற்றுப் பாடல்கள் என்றாலே மகேந்திர கபூர்தான் என தூர்தர்ஷன் முடிவுசெய்திருந்ததும் ஒரு காலம். என்னைப் போன்ற திருவல்லிக்கேணி ஆசாமிகள் எழுபதுகளில் 'ஏ நீலே ககன்கே டலே தர்தி கா ப்யாரு பலே' பாடலைக் கேட்காமல் உருது பேசும் மக்களின் பகுதியில் உலவியிருக்க முடியாது. அவ்வளவு பிரபலமான பாடல். இந்தப் பாடலின் மெட்டை அப்போது தமிழிலும் எடுத்தாண்டிருக்கிறார்கள். 'ஏ! அழகின் காலடியே அமைதி காண வந்தேன்' என்பதாகப் பாடல் வரிகள் இருந்தன. உருதுப் பாடல்களின் மொழியறிந்த ஈர்ப்பு உண்டாகியபோது அடிக்கடிக் கேட்கும் பல பாடல்களில் மகேந்திர கபூரின் பாடல்களும் இருந்தன. மிகக் குறிப்பாக நிக்காஹ் திரைப்படத்தின் தில்கி யே ஆர்ஸூ தி கோயி தில் ரூபா மிலே, பீத்தே ஹுவே லம்ஹோன் கி இந்த இரண்டும் ஒருவகையில் ஈர்த்தன என்றால், இதே படத்தில் வரும் பாடல...

நோன்புக்கஞ்சி - துபாய் ஈமான் சார்பாக

துபாய் ஈமான் அமைப்பினர் ஏற்பாடு செய்த இஃப்தாருக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. துபாய் தேரா அங்காடிப் பகுதியிலிருக்கும் குவைத்தி பள்ளிவாசலில் ஆண்டுகளாக செய்துவரும் இந்தப் பணி வியப்படைய வைக்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில், பள்ளிவாசலைச் சுற்றியுள்ள நடைபாதைகளில், எடுத்துக்கொண்டு செல்லும் பொட்டலங்கள் அனைத்துமாகச் சேர்த்து அன்று ஏழாயிரம் கஞ்சிக் கோப்பைகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. மாலையில் இஃப்தாரிற்காக அதிகாலையில் பணி துவங்குகின்றது. காய்கறி நறுக்குவது முதல் கஞ்சி காய்ச்சுவது வரை மதியம் வரையிலும் வேலை நடக்கிறது, மதியத்திற்கு மேல் ப்ளாஸ்டிக் கொள்கலனில் ஊற்றப்பட்டு மரப்பெட்டிகளில் வைத்து விநியோகத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். நோன்பு திறப்பதற்கு கஞ்சிக் கொள்கலனை வைப்பது முதல், நோன்பு திறந்த பின் இடத்தைச் சுத்தம் செய்வது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சேவையில் ஈடுபடுகின்றார்கள். மதவேற்றுமையின்றி இந்தப் பணிக்கு தன்னாலியன்ற பணிகளைச் செய்யும் ஒருவரையும், ஆர்வலர்களுக்காக மட்டும் தனது உணவகத்திலிருந்து தினமும் உணவு அனுப்பி வைக்கும் இன்னொருவரையு...

எ வென்ஸ்டே - இந்திப்படம் எனது பார்வையில்

எ வென்ஸ்டே, நண்பர் பிரகாஷும் , நண்பர் சுரேஷ் கண்ணனும் ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். ஆளை அடிக்கும் திரைத்தன வழமைகள் இல்லாமல் இயல்பாக விறுவிறுப்பை உண்டாக்கி, ஓரளவிற்கே கணிக்க இயலும்படியான முடிவை அமைத்து அறிவுஜீவியோ, சராசரித் திரை ரசிகனோ யார் பார்த்தாலும் பாராட்டும்படியான அமைப்பில் இருக்கும் படம். மிஸ்டர் பொதுஜனம் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும்? இப்படியும் நடக்கலாம். இதுதான் கதை. எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டு, மும்பை காவல்துறைக்கு சவால்விட்டு தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி மிரட்டி அதில் வெற்றியடைகிறார் நஸீருத்தீன் ஷா. அந்த வெற்றிக்குப் பிறகு நடக்கப்போவதை ஓரளவிற்கு ஊகிக்கமுடிந்தாலுமே, சுவாரசியம் குறையவில்லை. படத்தில் நஸீருத்தீனுக்கு பாத்திரப் பெயர் கிடையாது. பெயர் சொல்வதான காட்சியில் 'இவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் பெயர் சொன்னால் அவரை மதத்துடன் தொடர்புபடுத்தி நீங்கள் பேசக்கூடும், பெயர் வேண்டாமே' என்னும் வசனத்தை ஒலிபரப்புகிறார்கள். நஸீருத்தீனின் உருது உச்சரிப்பு, தீவிரவாதிகளுக்கு சலாம் சொல்லும் பாணி, வீட்டார்களுடன் பேசும்போது உணவுவகை கீர் (பாயசம்) குறித்த...

பாடுவோர் பாடினால் - ரீமிக்ஸ் முயற்சி

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாலுடன் தேன்கனி சேரவேண்டும் கலைகலைத் தெய்வமாய்க் காணவேண்டும் கன்னி நீ இன்னும் ஏன் நாணவேண்டும் ம்ம்ம்... பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் இந்த வர்ணமெட்டை ரீமிக்ஸ் செய்து அதற்கு வேறு பாடல் வரிகளை எழுதினால் எப்படியிருக்கும் என நினைத்ததன் விளைவு. ***** டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி! ஸோமெனி ஷேக்ஸ் இனி தட்ஸ் மை ஹாபி! ஷைமக்கின் ஹ்ரித்திக்கின் ஸ்டெப்ஸில் க்ரேசி! ஸ்டார்ட் டுடே வொய் டிலே கொஞ்சம் யோசி! ம்ம்ம்... டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி! ஸ்டார் பக்ஸ் மேரி ப்ரௌனா பீட்ஸா டெய்ரி க்வீனா ஃபாஸ்ட் ட்ராக் டேக் கரீ.னா கம் வித் மீ செலீ.னா இன்று உனக்கென பர்த்டே வெய்ட்டிங் ஃபார் ஒரு ஃப்ரைடே இன்று உனக்கென பர்த்டே வெய்ட்டிங் ஃபார் ஒரு ஃப்ரைடே காத்த ரீனா கைஃபும் தோற்பாள் ப்யூட்டி க்வீனாய் உன்னை ஏற்பாள் ப்யூட்டி க்வீனாய் உன்னை ஏற்பாள்! (டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி) டேக் ஸம் காஃபி மானே பாய் ஃப்ரண்ட் இங்கு நானே லெட்'ஸ் ஹாவ் பார்ட்டி என்றால் கேர்ள் ஃப்ரண்ட் தேவைதானே எட்டி இருப்பது வீணே தொட்டி உடைக்கிற மீனே எட்டி இருப்பது வீணே தொட்டி உடைக்கிற மீனே ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்ஸ...

எம்.ஜி.ஆர். பாடல் - வைரமுத்து பாணி

சில நேரங்களில் சில கற்பனைகள் தோன்றுவதுண்டு. ஒருவேளை வைரமுத்து எம்.ஜி.ஆருக்குப் பாட்டெழுதியிருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ என நினைத்துப் பார்த்தேன். இது விளையாட்டாகச் செய்வதுதானேயன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கம் சிறிதும் கிடையாது. மெட்டு: தாயில்லாமல் நானில்லை காட்சி: தாய் குறித்ததன்று; வழமையான எம்.ஜி.ஆர்.பாணிக் காட்சி நாளை நானொரு மன்னவனே! நாவில் தமிழைச் சொன்னவனே! நான்கு திசை நாட்டினிலே நல்லவர் வாக்கினில் நின்றவனே! நாளை நானொரு மன்னவனே! தேவை அறியும் கலைஞன் - நான் தேய்பிறையில்லா நிலவன் தென்னகக் காற்றின் திசைகளில் நிறையும் அண்ணனின் அறிவுரை போற்றுபவன்! என் வழிப் பாதை யார் மறித்தாலும் எதிர்கொண்டு வீழ்த்தும் நான் மறவன்! (வென்று - நாளை நானொரு மன்னவனே) ஊழி அழிக்காப் பெருமை - என் உயிர்த்தமிழ் நாட்டின் வளமை உலகினில் ஒவ்வொரு நகரிலும் கேட்க உயிர்கொடுத்திடுவேன் இது உண்மை! ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் கொள்கையில் வாழ்வது என் தன்மை! (வென்று - நாளை நானொரு மன்னவனே) அன்புடன் ஆசாத்

பத்துப் படங்கள் - செல்பேசியில் எடுத்தவை

அத்த ஏன் கேக்றீங்க? கோஃப்த்தா, லஹம், ரூஸ், மக்ரோனி, குப்ஸ், ஹமூஸ், லப்னா, லபன், கபாப் அப்படி இப்படின்னு எல்லாம் அராபிக் மெனு...சல்தாஹை! எல்லாம் சாப்பிட்டுப் பழகிருச்சு. ==================== ஜுமைரா பீச் ஹோட்டலுதான். இணையத்துல தேடுனா இதவிட சூப்பரான படமெல்லாம் கெடைக்கும்...ஆனாலும், எனக்கு நான் என் மொபைல்ல எடுத்த போட்டோ....வுடு ஜூட்! ==================== பிரியாணிப் பானைய சூட்டோட தூக்கிக்கினு போவணும்னா என்னா வழி, இப்படித்தான் சவுக்குக் கட்டையக் கட்டி தூக்குவாங்க. ஆனா பாருங்க நாங்க சின்ன வயசா இருந்தப்ப இதக் கட்ற்துக்கு உலக்கை கேப்பாங்க, வீட்ல உலக்கையும் இருக்கும். இப்பல்லாம் வீடுங்கள்ள கல்யாண பிரியாணி செய்றதும் கொறஞ்சு போச்சு, உலக்கையும் யார் வீட்லயும் இல்ல. ==================== 2007, மே மாசம், விஜயகாந்த் கல்யாண மண்டபம் இப்படித்தான் இடிஞ்சு கெடந்துச்சு. ==================== நம்ம பக்கத்துல ஒருதொழிற்சாலைப் பகுதில தீவிபத்து நடந்துச்சு, அப்ப அந்தப்பக்கமா வண்டில போய்க்கினு இருந்தேன். ==================== அண்ணாசாலைல டூ வீலர்ல போகும்போது இந்த எடத்துல சிக்னல்ல வண்டி நின்ணு, செல்ஃபோன எடுத்து கேமராவ ஆ...