Skip to main content

Posts

இவர்கள் என்ன கழைக்கூத்தாடிகளா?

உயரே போகும்போது அச்சம் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயரே செல்ல உதவும் இயந்திரங்களில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள். என்னதான் மேலே போனாலும் விழமாட்டோம் என்னும் நம்பிக்கையை பாதுகாப்பு ஏற்பாடுகள் தந்ததால் உயரம் ஒரு பொருட்டாகத் தெரியாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், ஏறக்குறைய எழுபது அடிகள் உயரத்தில் பணியாளர்கள் இரும்புப் பாளங்களைப் பிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது ஒரு திகைத்து நிற்பதையும், இப்படிப் படம் எடுத்து வலைப்பூவில் இடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது. அரசின் சமீபத்திய ஆணையின்படி அனுமதிக்கப்படாத விளம்பரப் பலகைகளை எடுக்கும் பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்ணாசாலையில் அதிஉயரத்திலிருந்த சில விளம்பரப் பலகைகள் பிரிக்கப்பட்டு, போக்குவரத்திற்காக காத்திருக்கும்போது ஆகாயத்தைக் கொஞ்சம் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அப்படி அதிகமாகத் தெரிந்த ஆகாயத்தை ரசிக்கும்போது கூடவே இந்தக் காட்சியும் நினைவுக்கு வருகின்றது. அங்கே இருந்த விளம்பரதாரரின் ஒரு கடையின் கால்மணிநேர மின்சாரச் செலவுகூட இவர்கள் அனைவரின் ஒருநாள் கூலியைவிட அதிகமாக இ...

வாகன நிறுத்தமும் விதி மீறல்களும்

நிறுத்தங்களின்போது பட்பட்டென வேகத்தைக் குறைத்து கொஞ்சம் ஒதுங்கி இருசக்கரவாகனத்திலிருந்து இறங்காமல் உட்கார்ந்த நிலையிலேயே இடது காலால் சைடு ஸ்டாண்டை தள்ளிவிட்டு வண்டியை சரித்துவிட்டு வலது காலை அரைவட்டமடித்து வண்டியிலிருந்து இறங்காவிட்டால் நீங்கள் இன்னமும் இருசக்கரத்துக்கு பழக்கப்படவில்லை அல்லது வயதாகிவிட்டதாக உணர்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். எல்லா நிறுத்தங்களிலும் இப்படி சைடு ஸ்டாண்ட் போட்டுவிடமுடியாது. இந்து பத்திரிகை அலுவலக வளாகத்தில் இருக்கும் இருசக்கர நிறுத்தத்தில் எழுதியே வைத்திருப்பார்கள். 'சைடு ஸ்டாண்ட் போடாதீர்கள்' என. அங்கே ஒழுங்குபிள்ளையாக வண்டியிலிருந்து இறங்கி செண்டர் ஸ்டாண்டைப் போடலாம். நீண்ட நேரம் நிறுத்தவேண்டியிருந்தால் செண்டர் ஸ்டாண்ட். இல்லையென்றால், அலட்சியமாக வண்டி கழுத்தைத் திருப்பிப் பார்ப்பதான பாணியில் சைடு ஸ்டாண்டே அழகு. ஒழுங்கற்ற சைடு ஸ்டாண்ட் நிறுத்தத்தை அத்தனை ஒழுங்காகப் பழகியிருக்கிறோம். இந்த சைடு ஸ்டாண்டுக்கும் டீக்கடைகளுக்கும் பெட்டிக்கடைகளுக்கும் ஜென்மஜென்மமாய்த் தொடர்புபோல. சொல்லிவைத்ததுபோல் டீக்கடை, பெட்டிக்கடைகளின் முன்னே நிற்கும் வண்டி எதுவாக இ...

ராம் கோபால் வர்மா கி ஆக் - வர்மா ஏமாற்றிவிட்டார் :-(

ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான கதாநாயகி நிஷா கோத்தாரியா, ஜேம்ஸ் போல இன்னொன்றை எடுத்திருக்கலாம். முன்னாள் கதாநாயகி ஊர்மிளாவுக்கு வாய்ப்பு தரவேண்டுமா, பூத் போல இன்னொன்றை எடுத்திருக்கலாம். சுஷ்மிதா சென் மீது நல்லபிப்ராயமா, வாஸ்து போல இன்னொன்றை எடுத்திருக்கலாம். இவற்றை விடுத்து ஷோலேயை திரும்ப எடுக்கிறேன் என இப்படி ரசிகர்களை தண்டித்திருக்கக்கூடாது. ஷாருக்கின் டான், அமிதாபின் டான் அளவிற்கு இல்லை, பொருட்செலவைத் தவிர்த்து. ராம் கோபால் வர்மாவின் 'ஆக்', எதிலும் சிப்பி சாஹேபின் ஷோலேயின் அருகில்கூடச் செல்லவில்லை. டான், ஆக் இவையிரண்டையும் பார்த்தபின், கருப்பு வெள்ளையை வண்ணமாக்கி மொஹல்-ஏ-ஆஸத்தை வெளியிட்டு அதனை வெற்றிப்படமாக்கியவர்கள் இந்தித் திரை உலகிற்கு செய்த சேவை, மேற்படி மறுதயாரிப்பு - சந்தைப் பிரபல - விளம்பர விரும்பி நிறுவனங்களைவிடவும் பல படிகள் மேல். திரும்பத் திரும்ப பலமுறை பார்த்தாலும் சலிக்காதிருக்கும் ஷோலே எங்கே, முதன்முறை பார்க்கும்போதே அங்கங்கே பலமுறை சோம்பல் முறிக்க வைத்த ஆக் எங்கே. ஷோலே வணிகப் படம்தான், மசாலாதான், ஆனாலும் கதையமைப்பும் வசனமும் இன்று வரையிலும் காலாவதியாகிப்போனதாக...

இரண்டு கவிதைகள்

1. மேடு பள்ளம் உனக்கு எங்கே புரியப்போகிறது மகிழுந்தின் கண்ணாடி இறக்கி என்னைப் பார்த்து உறுமிச் செல்கிறாய் கடைந்த எந்திரப்பாகம் பார்ப்பதற்குதான் சிறிய உருளை அதன் எடை என்ன தெரியுமா உன்மேல் ஒருநாள் சரிந்து விழுந்தால் உனக்கு அதன் கனம் தெரியக்கூடும் இரண்டு ஆள்கள் அதை சாக்குப்பையின் நடுவில் வைத்து மூச்சடக்கி தூக்கிக் கட்டினார்கள் தெரியுமா எண்ணூரிலிருந்து மிதித்து வருகிறேன் இடையில் தொண்டை வரண்டபோது தேநீர் குடிக்க நாலணா குறைவாக இருந்தது கிடக்கட்டும் தேநீர் குடிக்காவிட்டால் என்ன திரும்பும்போது கொண்டித்தோப்பு வழியாகச் சென்று மூங்கிலின் மேல் வண்ணக்கோடிழுத்து அப்பி வைத்திருக்கும் சவ்வு மிட்டாயில் கோமாளிப்பொம்மை செய்து தங்கைக்கு வாங்கிப்போக போதுமான சில்லறை இருக்கிறது வெளிநாட்டுப் பானம் உறிஞ்சும் உனக்கு ஒரு ரூபாய் 'வாட்டர் பாக்கெட்'டுக்கு ஆலாய்ப் பறப்பவனின் கவலை எங்கே புரியப்போகிறது உறுமிச் செல்கிறாய் கொஞ்சம் தடம் மாறினாலும் முறைக்கிறாய் வேண்டுமென்றா செய்கிறேன் ஒரே சொத்தென்று அப்பா விட்டுப்போன மிதிவண்டியில் எண்ணெய் விடவும் காசில்லாமல் இப்படித்தான் ஓவ்வொரு நாளும் மூச்சிறைக்க மிதித்துக்கொண்டிர...

ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்

"ஏய்! என்னை என்ன பொட்டு வச்சுக்கினு பொங்கல் சாப்புர்ரவன்னு நெனச்சியா. பழைய போலீஸ் ரெக்கார்ட எடுத்துப் பாரு. ஆதிடா! காசி மேடு ஆதி! சொர்ருவிடுவேன்" இதுதான் அவர் (சுமன்) ரஜினியிடம் வெடிக்கின்ற அதிகபட்ச வில்லத்தனம். ரஜினிக்கு இருக்கும் ரசிக அங்கீகாரங்களுக்கு முன் இந்த அதிகபட்ச வில்லத்தனம் குழந்தைத்தனமாகத் தோன்றுகிறது. இத்தனை அங்கீகாரம் ரஜினிக்குக் கிடைப்பதற்கு முன்பே அவருக்கு திரைப்படங்களில் கிடைத்த சில வில்லன்களை நினைத்துப்பார்க்கத் தோன்றுகிறது. கராத்தே மணி (அன்புக்கு நான் அடிமை): என்டர் த ட்ராகனின் பாதிப்பில் அங்கங்கே இளைஞர்கள் கராத்தே மோகத்தில் இருந்த நேரம். அந்நேரத்தில் தமிழகத்தில் காவல்துறைக்கு தற்காப்புப் பயிற்சிகள் அளித்த கராத்தே மணி என்னும் ஆர்.வி.தமிழ்மணி அவர்களை தேவர் ஃபிலிம்சார் திரைக்கு அழைத்து வந்தார்கள். பல பரிசுகள், கராத்தேயில் இந்திய அளவில் சாதனைகள், சர்வதேச அளவில் கராத்தே வீரர்கள் பட்டியலில் இடம் இப்படியாக தற்காப்புக் கலையில் பெயர்பெற்ற கராத்தே மணி திரையில் வில்லனாகத் தோன்றினார். வழமையான கதாநாயகன் - வில்லன் தன்மையிலிருந்து மாறுபட்ட அமைப்பில் பல தமிழ்படங்கள் வெள...

லஷ்மன் ஸ்ருதியும் மெகா தவிலும்

சென்னை அஷோக் நகரில் இருக்கும் லஷ்மன் ஸ்ருதி இசை வளாகத்திற்குச் சென்றபோது, அங்கே இருந்த பெரிய தவில் என்னை ஈர்த்தது. மேடைக் கச்சேரிகளில் பாடகர்கள் உபயோகிக்கும் ச்செஸ்ட் போர்டின் உயரத்தில் பாதியளவிற்கு இருந்தது. அருகில் இரண்டு பெரிய நாதஸ்வர அமைப்பு, அதனிடையே கண்ணாடித் தட்டைப் பொருத்தி பொம்மைகளை அலங்காரமாக வைத்திருக்கிறார்கள். உடற்பயிற்சிக் கருவிகள் விற்கின்ற கடை ஒன்றில் மெகா சைஸ் டம்பிள்ஸ் ஒன்றை உருவாக்கி அதனை நாற்காலியாகவும் பயன்படுத்துகின்றார்கள். ஜித்தாவில் டொயோட்டா நிறுவனத்தின் (அப்துல் லத்தீஃப் ஜமீல்) பயிற்சிக்கூடத்தில் பேச்சாளரின் மேசை (லெக்டர்ன்) ஒரு மெகா பிஸ்டன் வடிவில் அமைந்திருக்கும். கனவுக் காட்சி மெகா பொம்மைகள், லார்ஜர் தேன் லைஃப் கட் அவுட் கலாசாரத்தவர்களாகிய நமக்கு இதெல்லாம் ஜுஜுபிதான்...பிர்பி சல்தா ஹை. அன்புடன் ஆசாத்

அவுட்லுக் - பால்தாக்கரே - எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா

அவுட்லுக் இதழை (ஆகஸ்ட் 20, 2007 தேதியிட்டது) வாங்கி வரும்போது இப்படி சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் உள்ளே இருக்கும் என யார்தான் எதிர்பார்த்திருக்கக்கூடும். 11ம் தேதி முதலே இதழ் கடைகளில் கிடைத்திருந்தும் இதுவரையில் தமிழக அரசியல் வட்டாரங்களில் இருந்து எந்த எதிர்ப்பும் மறுப்பும் வந்ததாக தொலைக்காட்சி செய்திகளில் தெரிவிக்கப்படவில்லை. Passion என்று தலைப்பிட்டு மிகப் பெரிதாக Love actually என கீழே குறிப்பிட்டு, அசாருத்தீன் - சங்கீதா பிஜ்லானி சஞ்சய் காந்தி - மேனகா காந்தி ஜாவீத் அக்தர் - ஷபானா ஆஸ்மி மன்சூர் அலி கான் பட்டௌடி - ஷர்மிளா தாகூர் ராஜீவ் காந்தி - சோனியா காந்தி தர்மேந்திரா - ஹேமா மாலினி ஆர்.டி.பர்மன் - ஆஷா போஸ்லே இவர்களுடைய படங்களுடன், ராஜ் கபூர் - நர்கீஸ் ஜவஹர்லால் நேரு - எட்வினா மவுண்ட்பேட்டன் அமிதாப் - ரேகா எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இவர்களின் படங்களையும் வெளியிட்டு ஓரிரு வரிகள் எழுதியிருந்தது. அவற்றில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவிற்கு எழுதப்பட்டிருந்த வரிகள் அவுட்லுக்கின் தரத்திற்கு ஏற்றபடி கிடையாது என்பது எனது கருத்து. இரண்டு முதல்வர்களைப் பற்றி எழுதும்போது வரிகளை கவனமாக எழுதியிருக்கவேண்டும்...