Skip to main content

Posts

சாலையும் சகதியும்

அண்ணாநகரிலிருந்து வந்து முகப்பேறுக்குள் நுழைந்ததும் சிறிய மகிழ்ச்சி. இன்னும் கொஞ்ச தூரத்திற்கு குண்டும் குழியுமான சாலை கிடையாது. போக்குவரத்தும் ஓரளவிற்கு சீராக இருக்கும். நெருக்கடியாகவே இருந்தாலும்தான் என்ன? வாகனம் குதித்து குதித்து குதிரை ஓட்டுகின்ற உணர்வையெல்லாம் கொண்டுவராத வழவழப்பான பாதை. முகப்பேறின் மூலையில் தொழிற்பேட்டை துவங்கும் வரையில் சாலை சீராக இருக்கும். அதன் பின்னும் அத்தனை மோசமில்லை. தொழிற்பேட்டையில் ஃபோர்டு, ஹெச்.சி.எல். எல்லாம் வந்து போனதும் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி மூச்சை அதிகமாக உள்ளிழுத்து தேவைக்கும் அதிகமாக காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொள்ளலாம். உங்கள் வழி தனி வழியாக நேராகச் சென்று நடந்துகொண்டிருக்கும் பாலக் கட்டுமானப் பணிகளை குறுக்குவெட்டாகக் கடந்து தொழிற்பேட்டையின் குறுக்குச் சந்துகளுக்குள் நுழைவதாக இருப்பின் ஒன்றும் பிரச்சனை இல்லை. நிமிர்த்திய நெஞ்சை உள்வாங்கத் தேவையில்லை. ஆனால், தப்பித் தவறி கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் சாலையில் நாம் பயணம் செய்யவேண்டிய சூழல் அமைந்ததேயானால் அபார பொறுமையும், தன்னம்பிக்கையும், வண்டியோட்டும் திறனும் இல்லாமல் கதை நடக்காது. ம...

பீட்டர் ஹெய்னுக்கு சிவாஜியும் அன்னியனும் மட்டுந்தானா?

பீட்டர் ஹெய்ன் என்றால் சிவாஜியும் அன்னியனும் மட்டுந்தானா? மாணவப் பருவத்தில் ரசித்த சில விஷயங்களில் இப்போது ஆர்வமில்லாமல் போனாலும் திரையில் வருகின்ற நல்ல சண்டைக் காட்சிகளின் மீதான ஆர்வம் மட்டும் இன்னமும் குறையாமல் இருக்கிறது. நடைமுறைக்கு ஒவ்வாத முறையில்தான் திரையில் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன என்னும் உணர்வு அனைவரைப் போலவே எனக்கும் இருக்கின்றபோதும் சண்டைக் காட்சிகள் அமைப்பதை ஒரு கலையாக அணுகிப் பார்ப்பதால் அதன் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கிறது. அந்த ஆர்வத்தால் ஜெயா தொலைக்காட்சியில் பீட்டர் ஹெய்னுடனான உரையாடலைப் பார்த்தேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு பீட்டர் ஹெய்ன் குறித்து சில வரிகளை மரத்தடி குழுமத்தில் நான் எழுதியதை இங்கே படிக்கலாம். இளையவர்கள் அர்ஜுன், விஜய் இவர்களுடன் தூள் கிளப்புகிறார், பொறுத்திருந்து பார்க்கலாம் என அப்போது குறிப்பிட்டிருந்தேன். சமீபத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் பீட்டர் ஹெய்னை பல படிகள் உயரத்தில் ஏற்றியிருக்கின்றது. ஒரு சண்டைப் பயிற்சியாளருக்கு இத்தனை அங்கீகாரம் கிடைத்தது என்னைப் போன்ற சண்டைக் காட்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். அதே சமயம், அந்த உரைய...

இப்படியும் சில பொறுப்பான அதிகாரிகள்

ஆற்காடு சாலையானது போரூர் சந்திப்பில் முடியும் இடம் என்றைக்குமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போனது. நெரிசலில் நீந்தும் வேளைகளில் சில சுவாரசியமான காட்சிகளைக் காணலாம். கிலோ ரூ.55இற்கு மாம்பழ வகை ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷின் உள்ளே இருக்க, அதில் கால் பங்கு விலைக்கு அதே மாம்பழ வகையை தள்ளுவண்டிக்காரர் ஒருவர் ரிலையன்ஸ் ஃபரஷ்ஷின் வாசலிலேயே விற்றுக்கொண்டிருப்பார். போரூர் நடைபாதை அங்காடிகள் எங்கு முடிகிறதோ அங்கு ரிலையன்ஸ் ஃப்ரஷ் இருப்பதால் இந்த மேடுபள்ள வித்தியாசம் தெளிவாகக் காணக் கிடைக்கும். நடைபாதையில் கடை போடுவதற்காகக் குப்பையைப் பெருக்கி தனது கடைக்குப் பக்கத்தில் சிறிய மேடாகக் கட்டிவிட்டு, பெருக்கிய இடத்தில் நீர் தெளித்து கீரைகளை அடுக்கி வைக்கும் மூதாட்டியைக் காணலாம். பெருக்கித் தள்ளிய குப்பைக்கு அருகில்தானே கீரைகளை அடுக்கியிருக்கிறார் என வெளியூர்க்காரர்களும் கேட்கமாட்டார்கள். இப்படியான சுவாரசியங்களுடன் சேர்த்து இன்று இன்னொரு காட்சியும் காணக் கிடைத்தது. குன்றத்தூர் சாலையிலிருந்து வந்து திரும்பும் ஒரு மாநகரப் பேருந்து பழுதாகி நகரமுடியாமல் நின்றுவிட்டது. நின்ற இடமோ, சரியாக நான்கு சாலைகள் சந்திக்கும்...

காமராசர் நினைவு இல்லம் - ஒளிப்படம்

காமராசர் நினைவு இல்லம் - ஒளிப்படம் இன்று அதிகாலையிலிருந்து கோயம்பேடு, கொத்தவால் சாவடி, கிளைவ் பேட்டரி, பிராட்வே என நகர்வலம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. நகர்வலம் முடிந்து திரும்பும்போது சென்னை நகரம் விழித்து இயங்கத் துவங்கியிருக்கும் பொழுதில் அண்ணாசாலையின் துவக்கத்தில் காமராசர் சிலையருகே காவலர்கள் அதிகமாகக் கூடியிருந்தபோதே விளங்கிவிட்டது, இன்று அனைத்து அரசியல் தலைவர்களும் காமராசர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்வார்கள் என்பது. தேனாம்பேட்டையருகிலும் காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமையாக இருப்பினும் பள்ளிகள் அனைத்தும் அரைநாள் இயங்கின. பள்ளிகளின் இயக்கத்தால், வழக்கமாக ஞாயிறு காலைவேளைகளில் ஆளரவமற்று இருக்கும் சில வீதிகளில் ஓட்டாட்டம் இருந்தது. மதியம் செய்தித் தொகுப்புகளில் தலைவர்கள் மாலையிட்ட காட்சிகள். சென்னையில் திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜ் நினைவு இல்லத்தின் முன்னே உள்ள காமராசர் சிலைக்கும் நமது 'வழமை' யான முகம் மறைக்கும் அளவிற்கு மாலைகள் போடப்பட்டிருந்தன. தலைவர்கள் வந்து போனதால் அங்கங்கே அவர்களைச் சார்ந்த சில பதாகைக...

தலைக்கவசமும் இன்னும் சிலவும்

பதினான்கு ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் ஹோண்டா சிவிக் முதல் டொயோட்டா அவலோன் வரை பல சீருந்துகளை (cars) ஓட்டிய பின்னர், சென்ற மாதத்திலிருந்து இன்றோடு நான்காவது வாரமாக சென்னையின் சாலைகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்ற அனுபவம் வாய்த்திருக்கிறது. தலைக்கவச விதி கட்டாயப்படுத்தப்பட்டாலும் தளர்த்தப்பட்டாலும் அது குறித்து ஏதும் பாகுபாடின்றி தலைக்கவசத்துடன் வண்டி ஓட்டும் 'பழம்' அல்லது 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' வகையைச் சேர்ந்த ஜீவராசிகளுள் ஒருவனாக இருப்பதில் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாத நூற்றுக்கணக்கான சராசரி இந்தியக் குடிமகன்களுள் ஒருவனாக, குறிப்பிட்ட பாதை, குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், நகரின் பல சாலைகளில் பல வேளைகளில் இருசக்கரத்தில் சுற்றியதில் கிடைத்த அனுபவத்தால், தலைக்கவசம் அணிவதால் மட்டுமே இருசக்கர வாகன ஓட்டியின் உயிருக்கு பாதுகாப்பு கிடைத்துவிடுகின்றதா என்னும் மிகப்பெரிய கேள்வி மனதிற்குள் எழுகின்றது. தலைக்கவசம் அணியவேண்டும், அதில் எந்தவிதமான சமாதானத்திற்கும் இடமில்லை. ஆனால், தலைக்கு வரும் ஆபத்திற்கும் மேலாக இருசக்கர வாகனஓட்டிகளுக்கு இன்னும் எந்தெந்த விதங...

சீனி கம் - எனது பார்வையில்

இடதுகைப் பழக்கமும், நடக்கையில் சற்றே சரிந்திருக்கும் இடதுபுறத்தோளும், ஓடும்போது இருக்கும் கம்பீரமுமாக எழுபதுகளில் டான் திரைப்படத்தில் பார்த்த அதே அமிதாப், முப்பதாண்டுகளுக்கும் மேலாகியும் இன்னமும் வசீகரம் குறையாமல் சீனி கம் திரைப்படத்தில். தமிழில் டப்பிங்கோ, ரீமேக்கோ செய்தால் 'உனக்கு 34 - எனக்கு 64' என்று பெயர் வைப்பார்களோ? அந்த அளவிற்கு வயதிற்கு முக்கியத்துவம் கொடுத்து வசனங்களை எழுதியிருக்கிறார்கள். அமிதாப், தபு, பரேஷ் ராவல் என மூன்று பேர்களை மையப்படுத்தியும், சற்று வெளியே சென்று ஸொஹ்ரா சைகலை இணைத்து கொஞ்சம் நகைச்சுவையையும், சமையற்காரர்களை இணைத்து கொஞ்சம் நகைச்சுவையையும், பெண்குழந்தை ஒன்றையும் கதையில் இணைத்து கொஞ்சம் அழுகையையும் சேர்த்து மிகக்குறைவான கதாபாத்திரங்ளுடன் அமைந்து குடும்பத்துடன் அமர்ந்து (ஒரே ஒரு காட்சியில் கொஞ்சம் மட்டுமே நெளிந்து, மற்றபடி வேறெங்கும் நெளியாமல்) பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கான திரைப்படம். லண்டனில் சொந்தமாக இந்திய உணவகம் வைத்திருக்கும் கண்டிப்பான முதலாளி (தலைமை சமையல்காரர்), 64 வயதாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் புத்ததேவ் சாஹேப் (அமிதாப்). ...

சிவாஜி - முன்பதிவு துவக்கநாள் படங்கள்

இன்று காலையில் (10.6.2007) சென்னை - வடபழனி அருகே கமலா திரையரங்கை கடக்கும்போதே விளங்கிவிட்டது ' சிவாஜி - தி பாஸ்' வெளியாகவிருக்கும் அரங்கங்களில் முன்பதிவு செய்வதற்காக ரசிகர் கூட்டம் அலைமோதும் என்று. ரசிகர் கூட்டம் மட்டும்தான் அலைமோதும் என நினைத்தேன். ஆனால், தொலைக்காட்சி நிருபர்களும், பத்திரிகைக்காரர்களுமாக அவரவர் ஒருபக்கத்திற்கு மொய்த்துக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. சாந்தி திரையரங்கில் அந்தக்காலத்தில் அண்ணன் ஒரு கோயில் திரையிடப்பட்டபோது, கால்களை இழந்த ரசிகர் ஒருவர் தவழ்ந்து தவழ்ந்து திரையரங்கிற்கு வர, அந்த நேரத்தில் அரங்கிற்கு வந்திருந்த சிவாஜி அவர்கள் அந்த ரசிகரைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவருக்கு சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்து, எப்பொழுது அவர் சாந்தி திரையரங்கிற்கு வந்தாலும், வரிசையில் நிற்காமல் ஒரு சீட்டினை நேராக மேலாளரிடம் சென்று வாங்கிக்கொள்ளலாம் என உத்தரவும் பிறப்பித்ததாக தெரிந்தோர்கள் சொல்லக் கேட்டதுண்டு. இன்று அது போன்றதொரு காட்சியினை சத்தியம் திரையரங்கில் சிவாஜி திரைப்படத்தின் முன்பதிவில் கண்டேன். என்னவொரு மாற்றம் - கால்கள் இல்லாதிருக்கும் அந்த ரசிகருக்காக ...