Skip to main content

புத்தகக் கண்காட்சி - படங்கள்



ஸ்டார் க்ளாஸ் புக்கு சார். பாரா ஏற்கெனவே எழுதிட்டாரு, நானும் என்னோட அனுபவத்த செல்றனே. வடை பஜ்ஜி கணக்கால்ல விக்கிது. நானு வாங்கும்போது வெயிட்பண்ணி நாலாவது ஆளா வாங்குனேன். ஏதோ ஸ்டாட்டிஸ்ட்டிக்ஸ் எடுக்றாங்ளாட்டம் இருக்கு, பில் போடும்போது ஏரியா கேக்குறாங்க, மத்த கடைக்காரவுங்க பில்லு போடும்போது ஏரியா கேக்கல, தினத்தந்தில மட்டுந்தான் கேக்குறாங்க.

புக்கு கலக்கல் சார். நம்மூட்டுல பசங்களுக்கு தமிழ் தேர்ட் லேங்குவேஜ்தான், வளைகுடா வளர்ப்பால இதெல்லாம் தவிர்க்க முடியாது, ஆனாலும் பாருங்க, புக்கு வீட்டுக்கு வந்த அஞ்சாவது நிமிஷம் “பொதுக்கூட்டம்னா என்னா”ண்ணு சின்னப்பொண்ணு கேட்டுச்சு, அதான் சார் தினத்தந்தி.

”இதுதான் பேநசீர் வாப்பாவா?”

“இந்திரா காந்தி எப்படி இருக்காங்க பாருங்க”

“ஹிரோஷிமா லாங் ஷாட் மட்டும் போட்டிருக்காங்க, எங்க பாம் போட்டாங்கன்ற படம் இந்த புக்குல இருகுமா”

இதெல்லாம் புத்தகத்தப் பாத்து வந்த டயலாக்ஸ். இத்தினிக்கும் பசங்க நெட்டுல கூகுள் இமேஜுல உலாவுறவங்கதான். பிரிண்ட்டு பேப்பர் குவாலிட்டில்லாம் பாத்தா 270ரூ வெலன்றது ஒண்ணுமே இல்ல.

***************



சனிக்கெழம அஞ்சரை மணிக்கு எடுத்த போட்டோ, கூட்டம் அப்ப ஆரம்பிச்சுருச்சு.

***************



புக் ஸ்டால்ல மட்டுமில்ல, வெளில இருக்ற கேண்டீனுங்கள்ளயும் கூட்டந்தான்.

***************



பாலகுமார யோகியாருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கு சார். அவர்து, ‘உடையார்’ அங்கங்க டிஸ்ப்ளேல பாத்தேன்.

***************



வழக்கம்போல இரத்த வங்கிக்காரவுங்க. ஒரு அக்கா நிண்ணுக்குனு இரத்தம் குடுக்க விருப்பங்களான்னு கேட்டுக்குனே இருக்காங்க.

****************



பாவம் சார் ஏபிஜே அய்யா. இப்படி ஒரு மட்டமான கிராஃபிக்ஸ் வேலைக்கு அவரு முகந்தானா கெடைச்சுது? கஷ்டம்.

***************



குமுதம்காரவுங்க ப்ளெக்ஸ்ல கலக்கிட்டாங்க போங்க.

***************



வாலி சார், நம்மாளு. புக்கு வெளி வந்தப்பவே வித்தவுட் டிஸ்கவுண்ட் வாங்கிட்டேன்.

***************



வணிகமணிகள் நூல்கள் எழுதுவது சமுதாயத்துக்கு நல்லது, எனக்கு மாற்றுக்க கருத்தில்லை. ஏன் கமலா தியேட்டர் ஓனர் புக்குங்களுக்கு ப்ளக்ஸ் வெக்கல?

***************



அம்மி கொத்தாத சிற்பியும், அவ்வப்போது அம்மி கொத்தும் சிற்பியும்.

***************



Talk of the town of Tamil literature.

***************



உயிர்மைல சாருவும் மனுஷ்யபுத்திரனும் பேசிக்கினு இருந்தாங்க. பின்னவரு பேசிக்கினு இருக்கும்போதே வாசகர்களுக்கு (ரசிகர்களுக்கு?) புக்குல சைன் பண்ணி குடுத்துக்குனே இருந்தாரு.

***************



கவியரங்கம், நானு கேக்காம இருப்பனா, கேட்டேன், அது ஒரு சோகக்கதை. அப்புறமா நேரங்கெடைக்கும்போது பொலம்புறேன்.

எங்காளு வாலி கலக்குனாரு...கைதட்டலுக்கு...ஆனா வுள்ள...அப்புறமா சார்.

***************



’நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு நடப்பது நலமாய் முடிந்துவிடும்’ - வாலிதான் சார், அடிமைப்பெண்ல ஏமாற்றாதே பாட்டுல எழுதுனது.

***************



அ.நீ.சார் வந்து பிரசன்னாகிட்டக்க சொன்னது சரிதான், இஸ்லாமிக் பேஸ்டு பப்ளிகேஷன்ஸ் நெறையத்தான் ஸ்டால் போட்டிருந்தாங்க, ஆனா, இலவசமா ஒண்ணும் குடுக்கலல்ல, பைசா குடுத்துதான மக்கள் வாங்கிக்குனு போறாங்க.

***************



ஹிக்கின்ஸ்பாதத்தில்
ஏகப்பட்ட பாதங்கள்

....சாரி சார், திஸ் ஈஸ் கால்டு ’வாலி’ஸ் எஃபெக்ட்.

***************



பிரசன்னாவும் ஞானியும் பேசிக்குன சப்ஜெக்ட் கேக்கணும்னா, தனிமடல் போடுங்க...அலைக்கற்றை மேட்டர்ன்னு ஒரு ஹிண்ட் மட்டும் தரேன்.

***************



நா.மு.வும் நம்மாளுதான். சினிமாவுல ஹிட்டாயிட்டா கவித புக்கு விக்குமுன்னா சினிமாவுலயும் ஹிட்டாவ்றது தப்பில்ல சார்.

சிறப்ங்களை உருவாக்க
அவ்வப்போது
அம்மியும் கொத்தலாம்

இது வடுகப்பட்டியார்ஸ் எஃபெக்ட்.

***************



செரி...இத்த ’பாதை’ன்னு சொல்லணுமா? ’பாந்து’ன்னு சொல்லணுமா? கொஞ்சம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுல எழுதியிருக்றதையும் பாத்திருங்க, நேரம் கெடைக்கும்போது.

***************



நானோவுக்கு சர்ரோகேட் அட்வடைஸ்மெண்ட், சல்தாஹை!

***************

பை பை!

Comments

ஐ'ம் மிஸ்ஸிங் திஸ்... :(
எங்களைப் போல் ஏக்கத்துடன் புத்தகக் கண்காட்சியை கனவு கண்டு கொண்டிருப்போருக்கு நல்ல பதிவு...

உண்மையில் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுறோம்..:-(

ஆமா சுபைர், துபாயில் நாம இது போல ஒரு புத்தக கண்ட்காட்சி நடத்தினால் என்ன?
ஏனுங்க ராஜாக்கான், ஆசிப் வீட்ல புக்குங்க இருக்றது உங்களுகுப் புடிக்கலையா? சேல்ல போடணுமா?