Skip to main content

Posts

லக் திரைப்படம் - எனது பார்வையில்

நான்காண்டுகளுக்கு முன்னர் அஜய் தேவ்கனின் 'கால்' திரைப்படம் குறித்து எனக்கும் பதின்மவயது நண்பர்களுக்கும் சில கருத்து வேறுபாடு இருந்தது. திரைப்படம் அத்தனை பொழுதுபோக்காக இல்லையென நானும், அப்படியெல்லாம் இல்லை பொழுதுபோக்காகத்தான் இருந்தது என்று பதின்மவயதினரும் உரையாடிக்கொண்டோம். இப்பொழுது ஷ்ருதி ஹாஸன் மட்டும் 'லக்' திரைப்படத்தில் நடித்திருக்கவிலையென்றால் கால் படத்தை இயக்கினார் என்பதைத் தெரிந்த பின்னர் இயக்குனருக்காகவும், சஞ்சய் தத்திற்காகவும் மட்டுமே லக்கைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. ஷ்ருதிக்காகத்தான் முதல்நாள் படத்திற்குச் சென்றிருந்தேன். லக்கை நல்ல பொழுதுபோக்குப் படமாக உணர்கின்றேன். திரைப்படங்களை சிலர் குப்பையென்று ஒதுக்குவதற்கும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதற்கும் அவரவர் தேவை, ரசனை, அணுகுமுறை, சமுதாயச் சிந்தனை, அறிவு முதிர்ச்சி இப்படியான பல காரணிகள் உண்டென்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே ஒவ்வொரு படத்தையும் அணுகுவதால் எதிர்பார்க்கும் விஷயம் திரைப்படத்தில் கிடைக்காமற்போனாலும் தேவையற்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிகின்றது. அப்படியிருந்தும் சில சமயங்களில் சில படங்கள் பொர...

அமீரக வலைப்பதிவர் சந்திப்பு 19.7.2007

ஷப்-யே-மிராஜ் தினத்தன்று அமீரகத்தில் அரசாங்க விடுமுறை. இந்த வழமை சவூதியில் கிடையாது. அமீரகத்தில் இரவுநேர சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் உண்டு. சவூதியிலலும் சிறப்புத் தொழுகைகள் உண்டென்ற போதிலும், அங்கே ஈகைத் திருநாள், தியாகத் திருநாள் என்று இரண்டு பெருநாள்களின் முன்னும் பின்னுமாக நீண்ட விடுமுறைகள் தருவதால் நாட்கணக்கு நேராகிவிடுகின்றது. சனிக்கிழமையன்றும் விடுமுறையிலிருக்கும் கொடுத்துவைத்தவர்களுக்கெல்லாம் வெள்ளி, சனி, ஞாயிறென்று மூன்று நாள் விடுமுறையாகிவிட சிலர் அவரவர் ஊருக்கும் அருகிலிருக்கும் நகரங்களுக்கும் பறந்தார்கள். நண்பர் ஆசிப் அறிவித்ததன் பேரில் சங்கட் சிட்டி திரைப்படத்தைத் தவிர்த்து நான் வலைப்பதிவர் சந்திப்பிற்குச் செல்ல முடிவு செய்தேன். சந்திப்பில் படம் காட்டுவதற்காக சில புத்தகங்களை அள்ளிப் போட்டுக்கொண்டேன். அள்ளிய புத்தகங்களுடன் அப்பொழுதே வாங்கிய அல்கெமிஸ்ட்டையும் எடுதுக்கொண்டேன். இதுபோன்ற வேலைகளை ஆசிப், அய்யனார் இவர்களே இதுவரையில் பதிவர் சந்திப்பில் செய்வார்கள். சென்ற சந்திப்பில் கிட்டத்தட்ட இதே இடத்தில் அவர்கள் புத்தகக் கடை விரித்தார்கள், இந்த சந்திப்பில் நான். சுபைரையும் அ...

அமீரக வலைப்பதிவர் சந்திப்பும் சில எண்ணங்களும்

அண்மையில் சந்தித்த இளைஞர்களின் கடமையுணர்ச்சியும் அணுகுமுறையும் பாராட்டும்படி இருந்தது. இருக்கின்றார்கள். * துபாயில் இருக்கும் கல்லூரி ஒன்றில் நிர்வாகம் பயிலும் மாணவி தனது புறத்திட்டு ஒன்றிற்காக நேர்காணல் எடுக்க வந்திருந்தார். 'எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டேன். 'எனக்குக் கிடைத்த பட்டியலில் அகரவரிசைப்படி முதலில் உங்கள் பெயர் இருந்தது, நேரம் கேட்டேன் நீங்களும் சரியென்றீர்கள், வந்துவிட்டேன்' என்றார். 'நீங்கள் ஏதாவது கேட்கிறீர்களா, இல்லை நான் எனது பணி குறித்த விவரங்களைச் சொல்லட்டுமா, உங்களுக்கு எது வசதி' , என்றேன். 'நீங்களே சொல்லுங்கள்' என்றார். கால்மணிநேர விவரிப்பிற்குப் பின் 'இது மேலோட்டமான விவரம்தான் இன்னமும் விளக்கமாகச் சொல்லலாமா? இவற்றை உங்களால் கிரகிக்க முடிகின்றதா?' என்றேன். 'அய்யா, நானும் இது மேலோட்டமாகச் செல்வதாகவே உணர்ந்தேன், எனக்கு இன்னமும் அதிகமான விவரங்கள் தேவை' என்றார். அவர் மாணவியா நான் மாணவனா என்று கொஞ்சம் யோசித்து அவருடைய கால்மணி நேரத்தை வீணாக்கிய குற்ற உணர்வில் நுணுக்கமான விவரங்களைப் பகிர்ந்துகொண்டேன். ந...

பில்லூ ரானியும் கஜுராரேயும் - சில கோவையற்ற எண்ணங்கள்

இந்த வடக்கத்திய தபேலா அடிக்கு எப்பொழுது ரசிகனானேன் என்பது நினைவில் இல்லை. சிறிய வயதில் இஸ்லாமியப் பாடகர்களுடன் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் 'காதர்வலி தர்பாரல்லா அல்லா! கஞ்ச்-ஏ-ஸஃபாய் தர்பாலல்லா அல்லா! ஆஹா பிரமாதமல்லா அல்லா!' என்னும் வரிகளுக்கு உடன் குமுக்குகுமுக்கென குமுக்கிய தபேலா ஈர்த்ததா? அதற்கும் முன்னால் ஜவார் உசேன்கான், முகமது உசேன்கான் தெருக்களில் கவ்வால் அட்டா அலி ஆசாத்தின் சாதகத்தின்போது ஒலித்த தபேலா ஈர்த்ததா? 'ஹை அகர் துஷ்மன்' என்னும் ஹம் கிஸிஸே கம் நஹீன் திரைப்படத்தின் கவ்வாலி ஈர்த்ததா? அஜீஸ் நாஸானின் 'ஜூம் பராபர் ஜூம் ஷராபி' ஈர்த்ததா? அமர் அக்பர் அந்தோணியில் அக்பர் இலாஹாபாதி (ரிதி) பாடிய 'பர்தா ஹை பர்தா ஹை'? லைலா மஜ்னூவின் 'ஹோக்கே மாயூஸ்'? சரியாகச் சொல்லத் தெரியவில்லை. எது முதலில் ஈர்த்தது என்று சொல்ல இயலாவிட்டாலும் இன்றைக்கும் தலையாட்ட வைக்கிறது தபேலா குமுக்கு. ஜித்தாவில் இருக்கும் எனது நண்பருக்கு கோடி கொட்டிக்கொடுக்கலாம். என்னைப்போலவே வடக்கத்தி வாசம் பிடித்துப்போனவராக இருப்பதால் வீர்-ஸாராவின் 'ஆயா தேரே தர்பர் தீவானா'...

பைக் பிரியர்களுக்காக

இங்கிருந்து வெளியாகும் 'Wheels' வாரப் பத்திரிகை காணக் கிடைத்தது. பல பகுதிகள் நம்மை ஈத்தாலும் கடைசியாக கண்கள் அதிகமாக மேய்வது விலைப்பட்டியலில்தான். இணையத்தில் உலவினால் சொடுக்கில் கிடைக்கும் விலைப் பட்டியல்தான். ஆனாலும், ஒவ்வொரு தயாரிப்பாக தேடிப் பார்த்து வகையைத் தேர்ந்தெடுத்து விலையைப் பார்ப்பது வாகனத்தில் அதீத ஆர்வமுள்ளோர்களால் மட்டுமே முடியும். மொத்தமாக ஒரே இடத்தில் பட்டியல் இருந்தால் போகிறபோக்கில் விலையைப் பார்த்துவிட்டுப் போகலாம், வாங்க யோசிக்கலாம் இல்லையென்றால் பெருமூச்சாவது விட்டுக்கொள்ளலாம். சில பெருமூச்சுகள் எனக்கென்றே வாய்த்திருக்கின்றன, சல்தாஹை! தயாரிப்பிற்கு மூன்று (மட்டும்) வகைகளை விலையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து இங்கே இடுகின்றேன். அதிவிலை, ஆகக் குறைந்த விலை, இடைப்பட்ட விலை என மூன்று வகைகளை இடுகின்றேன். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் வாங்குவதாக இருந்தால் மட்டுமே. வேறு நாடுகளிலென்றா, அந்நாட்டிற்கேற்ப வரிகளும் கூடும். (இன்றைக்கு ஒரு திர்ஹத்தின் மதிப்பு ரூபாய் 12, 70காசுகள்) நிறுவனம்: தயாரிப்பு - வகை - திறன் - எடை - விலை பஜாஜ்: CT100 - கம்யூட்டர் - 99.27சிசி / 4ஸ்பீட் ...

எழுத்துக்கூடக் கவியரங்கிற்கு எழுதியது

பொன்முட்டை -------------- மாதமொரு முட்டையிடும் வாத்து நானையா - நல்ல மஞ்சள்நிறப் பொன்முட்டை திர்ஹம் தானயா காதவழிப் பாதையிலே தனிமை வெக்கையில் - நான் கண்பிதுங்கி இட்டமுட்டைக் கதையைச் சொல்லவா மீசைவரி மேலுதட்டில் காணும் முன்னரே - நானும் மீனம்பாக்கம் போவதற்கு பெட்டி கட்டினேன் வீசைவிலை ஆங்கிலமா அரபு உருதுவா - எதுவும் விளங்காது தமிழ்தவிர முட்டி மோதினேன் ஏட்டுச்சுரைக் காயெடுத்துக் குழம்பு வைக்கவா - இல்லை ஏவுகின்ற வேலைசெய்து முட்டை போடவா வாட்டுகின்ற கேள்வியெந்தன் இடுப்பு ஒடித்தது - அடடா வளமான முட்டையொன்றை இடமு டிந்தது வந்தகடன் தீர்ப்பதற்கு இட்ட முட்டைகள் - அங்கே வாடகைக்கே போதவில்லை அழுகை வந்தது சொந்தக்கதை சோகக்கதை பழகிப் போனது - எந்த சோகத்திலும் முட்டையிடும் திறமை வந்தது அரபுலகா பாரதமா எங்கு காணினும் - யாரும் இடுவதெலாம் முட்டையன்றி வேறு ஒன்றிலை இரவுநேர மையிருட்டில் அழுது தீர்ப்பது - அங்கு இந்தியாவில் கண்டதில்லை இங்கு உள்ளது இட்டமுட்டை எல்லாமே எங்கு போனது - சுற்றம் ஈரநெஞ்சப் பாசத்தினால் பங்கு போனது திட்டமிட்டுப் போட்டதெல்லாம் களவு போனது - யாரோ தின்றுவிட்ட ஏப்பக்குரல் இங்கு கேட்டது விட்டகுறை சரியா...

பத்துப் படங்கள் - துபாய்

துபாய் சுற்று வட்டாரங்களில் உலவியபோது எடுத்த சில படங்கள். சென்ற மாதத்தில் மேகமூட்டமாக இருந்தபோது ஒரு ரவுண்டாணாவில் எடுத்தது. இந்த பக்கீஸ வாடகைக்கு எடுத்துகினு பாலைவனத்துல ஓட்டலாம். பெரியவங்களுக்குன்னா அரைமணி நேரத்துக்கு 125திர்ஹம், கொழந்தைங்கன்னா இதுல பாதிதான். மீன் தொட்டிதான், கொஞ்சம் பெருசா கட்டிட்டாங்களாம், துபாய் மால்ல :-) உம்-அல்-குவைன்ல ஒரு மஸ்ஜித். இப்னு பத்தூதா மால்ல இண்டியன் கோர்ட். அதே இப்னு பத்தூதா மால்ல பெர்ஷியன் கோர்ட்டோட கூரையும் சரவிளக்கும். ஹோண்டாவும் பல்சரும் பக்கத்துல பக்கத்துல நிண்ணுக்கினு இருந்துச்சு. பல்சர் இங்க நெறைய இருக்கு. புர்ஜ் அல் அரப் நிழல் மாதிரி தெரிஞ்சுக்கினு இருந்துச்சு. லண்டன் big bus மாதிரிதான், இங்க துபாய்லயும். ஷேக் ஸாயித் சாலைல இந்தப் படந்த எடுக்கும்போது இப்படி வந்திருக்கும்னு நெனைக்கல.